பணம் கொட்டப்போகுது: குரு வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்

Guru Vakra Peyarchi: குரு வக்ர பெயர்ச்சியால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 23, 2023, 02:42 PM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி சாதகமாக இருக்கும்.
  • சிம்மம் ராசிக்காரர்கள் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவார்கள்.
  • ஆராய்ச்சி சம்பந்தப்பட்டவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
பணம் கொட்டப்போகுது: குரு வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம் title=

குரு பெயர்ச்சியால் உருவாகும் விபரீத ராஜயோக, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தங்கள் ராசியை மாற்றுகின்றன. செப்டெம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், செழிப்புக்கு அதிபதியான குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். குருவின் வக்ர பெயர்ச்சியின் காரணமாக விபரீத ராஜயோகம் உருவாகின்றது. இது மிகவும் சுபமான ராஜயோகமாக கருதப்படுகின்றது. 

விபரீத ராஜ யோகம் எப்போது உருவாகிறது?

வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி ஜாதகத்தில் 6, 8, 12 ஆகிய வீடுகளின் அதிபதிகள் இணைந்தால், விபரீத ராஜயோகம் உருவாகும். விபரீத ராஜயோகம் என்பது முற்றிலும் எதிர்பாராத சூழ்நிலையில் ஒருவரை மிகப்பெரிய அளவிற்கு உயர்த்தும் வல்லமை கொண்டது. ஒருவருக்கு ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால், ராஜயோகம் உருவாகும். அதுவே, விபரீத ராஜயோகம் என்பது யாரும் எதிர்பாராத நிலையில் கிடைக்கும் பரிசு போன்றது. எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் சுலபமாக ஒருவருக்கு கிடைக்கும் பணம், பதவி, அந்தஸ்து ஆகியவற்றை இதன் எடுத்துகாட்டுகளாக கூறலாம். 

ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இப்போது தேவகுரு வியாழன் செப்டம்பர் 4, 2023 அன்று மாலை 5 மணியளவில் வக்ர பெயர்ச்சி அடைவார். 31 டிசம்பர் 2023 அன்று காலையில், குரு வக்ர நிவர்த்தி அடைவார். குரு வக்ர பெயர்ச்சியால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். தடைபட்ட உங்களின் வேலைகள் முடிவடையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பண வரவு அதிகமாகும். உழைக்கும் மக்களுக்கு புதிய வேலைக்கான பொன்னான வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும், 

மேலும் படிக்க | நேருக்கு நேர் வரும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், வெற்றிகள் குவியும்

கடக ராசி 

கடக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். குருவின் வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். வியாழனின் இயக்கத்தில் ஏற்படும் இந்த மாற்றம் உங்கள் ஜாதகத்தின் பத்தாம் வீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடக ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 31 டிசம்பர் 2023 வரை பண வரவு அதிகமாக இருக்கும். 

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி சாதகமாக இருக்கும். சிம்மம் ராசிக்காரர்கள் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவார்கள். ஆராய்ச்சி சம்பந்தப்பட்டவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். டிசம்பர் 31, 2023 வரை அதிர்ஷ்டமான நேரமாக இருக்கும். பல நாட்களாக தடைபட்ட பணிகள் வேகம் பெறும். நிதி நிலை மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் பல துறைகளில் முன்னேற்றம் அடைவார்கள்.

மிதுன ராசி 

மிதுன ராசிக்காரர்களின் ஜாதகத்தில் குரு வருமான வீட்டில் இருக்கப் போகிறார். எனவே நீங்கள் அதிகபட்ச நிதி நன்மைகளைப் பெறும் காலமாக இது இருக்கும். பணியிடத்தில் ஆதிக்கம் அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயத்தால் வங்கி இருப்பு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வியாழனின் வக்ர பெயர்ச்சி திருமண வாழ்க்கைக்கு வரப்பிர்சாதமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | துலா ராசியில் கேது... தீபாவளி முதல் ‘இந்த’ ராசிகளுக்கு குபேர யோகம் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News