Ratha Saptami: சூரிய பகவானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! தை மாத ரத சப்தமி வழிபாடு

Surya Jayanti Ratha Saptami: உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானின் பிறந்தநாள் ரத சப்தமி என்பது இந்துக்களின் நம்பிக்கை. சூரியனுக்கு உரிய விரதங்களில் மிகவும் முக்கியமானது ரத சப்தமி. ஆண்டுதோறும், தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 28, 2023, 10:32 AM IST
  • ரத சப்தமியில் சூரிய வழிபாடு வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுக்கும்
  • 2023 ரத சப்தமி ஜனவரி 27ம் நாளன்று அனுசரிப்பு
  • புண்ணிய தளங்களில் சிறப்பு வழிபாடு
Ratha Saptami: சூரிய பகவானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! தை மாத ரத சப்தமி வழிபாடு title=

உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானின் பிறந்தநாள் ரத சப்தமி என்பது இந்துக்களின் நம்பிக்கை. சூரியனுக்கு உரிய விரதங்களில் மிகவும் முக்கியமானது ரத சப்தமி. ஆண்டுதோறும், தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. தென் திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் சூரிய பகவான், தனது திசையை மாற்றும் நாள் ரத சப்தமி. இன்று முதல் தனது ரதத்தை, வடக்கு வழியில் திருப்பிப் பயணிக்கும் சூரியனின் போக்குவரத்து வழித்தட மாற்ற நாள் இன்று.

ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளி பிறப்பதாலும், ரத சப்தமி நாளன்று விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும் என்பது இந்து மதத்த்டில் தொன்றுதொட்டு இருந்துவரும் நம்பிக்கை. 

ரத சப்தமி வழிபாடு  

ரத சப்தமி நாளன்று சூரிய உதிக்கும்போது, ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இன்று சூரியனின் ஒளிபடுவதும், சூரியனை வழிபடுவதும் சிறப்பு. இன்றைய தினம் நீராடும்போது, ஏழு எருக்கம் இலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந்தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும். வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டபின், தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம்.

இந்துக்களின் நம்பிக்கைகளின்படி, தீபாவளியன்று நீராடுவது எவ்வளவு விசேஷமானதாக கருதப்படுகிறதோ அதேபோல, ரத சப்தமி நீராடலும் முக்கியமானது. இன்றைய தினம், சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் வைத்து நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும்.

மேலும் படிக்க | பிப்ரவரி ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு மகாலட்சுமியின் பரிப்பூரண அருள் நிச்சயம்!

ரதசப்தமி தினத்தில் சூரியனை வழிபடும்போது , சூரியனை நோக்கி, "ஓம் நமோ ஆதித்யாய... ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!' என்று சொல்லி வணங்க வேண்டும்..!

ரத சப்தமியன்று துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதும், இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. ஜோதிட ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார் என்பதால், அந்த சூரியனை வாழ்த்தி நன்றி தெரிவிக்கும் தை மாத சப்தமி நாள் மிகவும் முக்கியமானது.  

ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலம் தேர்க்கோலம் போடுவது வழக்கம். நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வதைப் பார்ப்பது புண்ணியத்தைத் தரும். ஏழு மலைகளின் மீது கோயில் கொண்ட திருப்பதி வெங்கடேச பெருமாளின் திருமலையில் ரத சப்தமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 

இந்த ஒருநாளில் மட்டும், காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் பவனி வருவார்ர் திருவேங்கடத்தில் குடி கொண்டிருக்கும் பெருமாள். தை மாத அமாவாசைக்குப் பிறகு ஏழாம் நாள் வரும் சப்தமியை ரத சப்தமி என்பார். சூரிய பகவானுக்கு உரிய நாள் ரத சப்தமியான இன்று சூரியனுக்கு நன்றி தெரிவித்து வணங்குவோம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது).

மேலும் படிக்க | Sani Ast: ஸ்தம்பித்துப் போகும் சனி! காரணம் என்ன? பாதிக்கப்படும் பாவப்பட்ட 4 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News