மனக் குழப்பங்களை உருவாக்கும் புதன் பெயர்ச்சி! வாயைக் கட்டுப்படுத்தினால் பிரச்சனையில்லை!

Budh Transit Bad Effects : புதன் பெயர்ச்சியினால் பிரச்சனையை எதிர்கொள்ளப்போகும் சில ராசிகள்! சுக்கிரனுடன் இணைந்தால் புதனும் வலுவிழந்து போவாரா?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 13, 2024, 10:17 PM IST
  • பிரச்சனையைக் கொடுக்கும் புதன் பெயர்ச்சி
  • சுக்கிரனுடன் புதன் இணைந்தால் யாருக்கு கெட்டது?
  • சூரியப் பெயர்ச்சியினால் புதன் பெயர்ச்சி பலன்கள் மட்டுப்படுமா?
மனக் குழப்பங்களை உருவாக்கும் புதன் பெயர்ச்சி! வாயைக் கட்டுப்படுத்தினால் பிரச்சனையில்லை! title=

இன்னும் சில மணி நேரங்களில் புதன் பெயர்ச்சி நடைபெற்றதும், ஏற்கனவே அங்கு இருக்கும் சுக்கிரனுடன் புதன் இணைவார். அதனால் ஏற்படும் லட்சுமி நாராயண யோகம் நன்மைகளை அள்ளித்தரும். சுக்கிரனும் புதனும் நன்மைகளை செய்யும் சுப கிரகங்கள் என்பதால் இந்த காலகட்டத்தில் அறிவும் படைப்பாற்றலையும் அதிகரிக்கும். நாளை முதல் நல்ல நேரம் என்று சொல்லும் அளவுக்கு நற்பலன்கள் நடைபெறும். ஆனால், எந்தவொரு நேரமும் அனைவருக்கும் நல்லதாக இருந்துவிடாது.

கிரக சஞ்சாரங்கள், கிரகங்களின் இணைவும், வக்ர பெயர்ச்சி, அஸ்தமனம் உதயம் என கிரகங்களின் பல்வேறு மாறுதல்களும் சிலருக்கு நன்மை செய்யும் என்றால், சிலருக்கு பாதகத்தையே தரும். நாளை உருவாகும் லட்சுமி நாராயண யோகம் யாருக்கு கெடுதலாக இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

புதன் சுக்கிரன் இணைவு

சுக்கிரன் காதல், காதல், அழகு, பொருள் வரவு, பணம் மற்றும் கலைக்கான கிரகங்கள் ஆகும். மகிழ்ச்சியை அளிக்கும் சுக்கிரன் மிதுனத்தில் இருக்கும்போது, புத்தியின் கிரகமான புதன் மிதுன ராசிக்குள் சஞ்சரிப்பது கண்ணியத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். இருந்தாலும், புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் சில ராசிகளுக்கு லட்சுமி நாராணய யோகம் கஷ்டங்களைக் கொடுக்கும்.

மேஷம்

புதனின் ஆதிக்கம் உங்கள் பேச்சினால் பிரச்சனையைக் கொடுக்கும். வருமானம் குறையலாம், விரயச் செலவுகள் அதிகரிக்கும். பண விவகாரங்களில் கவனமாக இருக்கவும். கடன் வாங்கி செலவு செய்வதைத் தவிர்க்கவும். சுப செலவுகளை செய்தால் மனதில் நிம்மதியாவது மிஞ்சும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மேலும் படிக்க | ரோகிணியில் இருந்து குரு கொடுக்கும் நன்மைகள்! 4 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்!

 

ரிஷபம்

புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறும். அது கவலையையும் பிரச்சனைகளையும் கொடுக்கும். சுக்கிரனுடன் இணையும் புதனால் மனசோர்வு ஏற்படும். மனதில் கவலை சூழ்ந்து இருப்பதால், வேலையில் சுணக்கம், பணியில் சோர்வு என பின்னடைவு ஏற்படலாம்.

கும்பம்

புதன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியைக் கெடுக்கும். சுக்கிரன் கும்பத்திற்கு நன்மையை செய்யும் என்றாலும், புதன் பெயர்ச்சியடைவதால் ஏற்படும் இணைவு குடும்பத்தில் கவலைகள் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் சரியான சமயத்தில் வராமல் பிரச்சனை ஏற்படுத்தும்.

துலாம்

புதன் பெயர்ச்சி, துலாம் ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களை அளிக்கும். சகோதரர்களிடையே வெறுப்புணர்வு தலைதூக்கும். நானா நீயா என்ற போட்டி உச்சத்திற்கு வரும். புதனின் பெயர்ச்சியால் சுக்கிரனும் உங்களுக்கு பலமிழந்து போகும் என்பதால், அமைதியாக இருப்பது நல்லது.  

குறிப்பு: ஞானக்காரகரான புதனின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் என்றாலும், அடுத்த 24 மணி நேரத்தில் நடைபெறவிருக்கும் சூரிய பெயர்ச்சியின் தாக்கத்தால் சிலருக்கு பிரச்சனை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.  

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | ராகு தோஷத்தை போக்கும் பரிகாரங்கள்! எந்த கோவிலில் வழிபட்டால் தோஷநிவர்த்தியாகும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News