பித்ருக்களுக்கான திதியை மகாளய பட்சத்தின் எந்த நாளில் கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும்! ஆச்சரியமான உண்மை!

Pitru Paksha Thidhi Tharpanam 2024 : பித்ரு பக்ஷ காலத்தில்  மூதாதையர்களுக்கான நீத்தார் கடன்களை செய்தால் முன்னோர்கள் திருப்தி அடைவார்கள். எந்த திதியில் தர்ப்பணம் செய்தால் என்ன நன்மை? தெரிந்துக் கொள்வோம்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 26, 2024, 06:02 PM IST
  • மகாளய பட்சத்தின் எந்த திதியில் தர்ப்பணம் செய்தால் என்ன நன்மை?
  • பித்ரு பக்ஷ காலத்தில் மூதாதையர்களுக்கான நீத்தார் கடன்கள்
  • முன்னோர்களின் ஆசி எந்த ரூபத்தில் கிடைக்கும்?
பித்ருக்களுக்கான திதியை மகாளய பட்சத்தின் எந்த நாளில் கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும்! ஆச்சரியமான உண்மை! title=

இந்து மதத்தின்படி, மறைந்த நம்முடைய முன்னோர்கள் மகாளய பட்சத்தில் தங்களுடைய சந்ததியினருடன் வந்து தங்குவார்கள் என்பது நம்பிக்கை. மகாளய பட்சத்தில் செய்யும் தர்ப்பணங்கள், எந்த திதி என்பதற்கு ஏற்றாற்போல பலன்களைக் கொடுக்கும். "மகாளயம்' என்றால் "கூட்டமாக வருதல்' என்று பொருள். அதாவது, மறைந்த நம் முன்னோர் அனைவரும் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம் ஆகும். 

புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும் காலம் தான் மகாளய அமாவாசை ஆகும். புரட்டாசி அமாவாசைக்கு மகாளய அமாவாசை எனப்படும்.இது அனைத்து அமாவாசைகளிலும் உயர்ந்தது என்று சொல்லப்படுவதற்கான காரணம் தெரியுமா?

அமாவாசை தர்ப்பணம்

அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம் என்றால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. நமது குடும்பத்தின் முன்னோர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து திதி கொடுக்க வேண்டும். நதிக்கரைகளுக்கு அல்லது நீர்நிலைகளுக்கு சென்று நீராடி, திதி கொடுத்து, பூஜை செய்து முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். தேவைப்படுபவர்களுக்கும், அந்தணர்களுக்கும், ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என அவரவர் விருப்பம் போல சக்திக்கு ஏற்றாற்போல தானமளிக்க வேண்டும்.

மகாளய பட்சத்தின் எந்த திதியிலும் தர்ப்பணம் செய்தால் என்ன பலன்கள்? 
மகாளய பட்சத்தின் முதல்நாள் பிரதமையன்று திதி கொடுத்தால் பணம் வந்து சேரும் என்றால், 2ம் நாள் துவிதியை நாளன்று செய்யும் தர்ப்பணம் ஒழுக்கமான குழந்தைகள் பிறக்க வழிவகை செய்யும். 3ம் நாள் திரிதியை நாளன்று செய்யும் தர்ப்பணம், நினைத்ததை நிறைவேற்றும். 

மேலும் படிக்க | பித்ரு பக்ஷ காரியங்களால் முன்னோர் திருப்தி அடைந்தார்களா? உண்மை சொல்லும் உயிரினங்கள்!

அதேபோல், மகாளய பட்சத்தின் நான்காம் நாள் சதுர்த்தியன்று செய்யும் தர்ப்பணம், பகைவர்களால் பிரச்சனை உண்டாகமல் தடுக்கும் என்றால், ஐந்தாம் நாள் பஞ்சமி நாளில் செய்யும் திதி காரியங்களால் உள்ளம் மகிழும் முன்னோர்கள் சொத்துக்களை வாங்க பித்ருக்கள் ஆசிர்வாதம் புரிவார்கள்.

மகாளயபட்சத்தின் ஆறாம் நாளான சஷ்டியில் திதி கொடுத்தால் பெயர் புகழ் கிடைக்கும் என்றால், 7ம்நாள் சப்தமியில் செய்யும் தர்ப்பணத்தால் சிறந்த பதவிகள் கிடைக்கும். எட்டாம் நாள் அஷ்டமியில் திதி கொடுத்தால், புத்திசாலித்தனம் அதிகரிக்கும், சமயோசித புத்தி ஏற்படும்.

ஒன்பதாம் நாளான நவமியில் கொடுக்கும் திதியானது, குடும்பத்தில் அமைதி, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறக்க அருள் கொடுக்கும் என்றால், 10ம் நாள் தசமி திதியில் கொடுக்கும் பித்ரு தர்ப்பணத்தால், அனைத்து ஆசைகளும் நிறைவேறும். மகாளய பட்சத்தின் பதினோராம் நாளான ஏகாதசியில் கொடுக்கும் திதி கலை கல்வியில் தேர்ச்சியையும், துவாதசியில் செய்யும் திதியால் பொன்னாபரணங்கள், நகைகள் சேரும்.

மகாளய பட்சத்தின் 13ம்நாள் திரயோதசியில் செய்யும் திதியால், தொழில் அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம் ஏற்படும் என்றால், 14ம்நாள் சதுர்த்தசியில் செய்யும் திதியால், நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி, எதிர்கால தலைமுறை நன்றாக இருக்கும். 15ம் நாள் மகாளய அமாவாசையன்று செய்யும் நீத்தார் கடன் பித்ரு பக்ஷ திதி தர்ப்பணத்தால், மேலே சொன்ன 14 நாட்களுக்குமான பலன்களும் நம்மை வந்து சேரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பொன் வைத்தாலும் பூ வைத்தாலும் களிமண்ணாய் மாறிய மர்மம்! புரட்டாசி சனியும் குயவரின் பக்தியும்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News