Latest Horoscope This Week December 30 To January 5 : 2024ஆம் ஆண்டு பலருக்கு பலவிதமான சோதனைகளை கொடுத்திருக்கலாம், சிலருக்கு பெரிய அளவிலான சாதனைகளை கொடுத்திருக்கலாம். வரும் வாரத்தில், இந்த ஆண்டின் முடிவு வர இருக்கிறது, அடுத்த ஆண்டில் 2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. இதையடுத்து, புத்தாண்டின் முதல் வாரத்திலேயே பலருக்கு பலவித அதிர்ஷ்டங்கள் அடிக்க இருக்கின்றன. அது எந்தெந்த ரசிகளுக்கு என்பதை இங்கு பார்ப்போம்.
மேஷம்:
வரும் வாரம் மேஷ ராசிக்காரர்கள் பிறரின் நலனை பார்ப்பதை விட்டுவிட்டு, தங்கள் நலனை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். உங்களை பற்றி நீங்கள் பல நாட்களாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் விஷயங்களை மாற்றுவீர்கள். இதனால், உங்களுக்கு ஏதுவான விஷயங்கள் வரும் வாரங்களில் நடைபெறலாம். புதிதாக நீங்கள் செய்த முதலீடு, அடுத்த வாரத்தில் லாபத்தை தேடித்தரலாம். ஒரு சிலர் சேமிப்பில் இறங்குவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள், இந்த வாரம் கொஞ்சம் அமைதியை கடைப்பிடிக்க வேண்டியது நல்லது. தொழில் ரீதியாக ஏற்படும் மாற்றங்களால் அசௌகரியம் ஏற்பட்டாலும் அதற்கு ஏற்றவாறு உங்களை பழக்கப்படுத்தி கொள்வீர்கள். நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது நல்லது. புது வருடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளன. அதை தவற விடும்படி எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
மிதுனம்:
உங்களை சுற்றி இருப்பவர்கள், பெரும் ஆதரவு கொடுப்பவர்களாக இருப்பர். பழைய நண்பர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்யலாம். புத்தாண்டின் முதல் வாரத்திலேயே தன்னம்பிக்கை உயரும் வகையிலான விஷயங்கள் நடைபெறலாம். தேவையற்று யாருக்கும் கடன் வழங்குவதை தவிர்க்கவும். இந்த நேரத்தில், இந்த ஆண்டில், நீண்ட கால முதலீடு குறித்து யோசனையில் இருப்பீர்கள். கடகம்:
கடகம்:
கடக ராசிக்காரர்கள், தங்கள் தொழிலிலும் தனிப்பட்ட வாழ்விலும் முன்னேற சரியான நேரம் இது. தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொண்டால், எதிர்பாராத செலவு ஒன்றை சமாளிக்கலாம். வேலையை தவிர்த்து, பணம் சம்பாதிப்பதற்கான இன்னொரு வழியை வருடத்தின் முதல் வாரம் வகுத்து கொடுக்கலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் உள்ள நல்ல விஷயங்களை பாராட்ட வேண்டிய நேரம் இது. உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்ய ஆரம்பித்தால் அதன் மூலம் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரலாம். இந்த வாரம், உங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சில செலவுகளை செய்வீர்கள். எதிர்கால சேமிப்பு குறித்த எண்ணங்கள் மேம்படும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சியில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். அன்புக்குரியவர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்க புதுப்புது யோசனைகள் மேம்படலாம். நிதி நிலையை உயர்த்த சில எதிர்பாராத வாய்ப்புகள் உங்களை தேடி வரலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன், சம்பந்தப்பட்ட துறைகளில் கை தேர்ந்தவர்களுடன் கலந்தாலோசிப்பது நல்லது.
துலாம்:
துலாம் ரசிக்காரர்களுக்கு இந்த வாரம் தனது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் இணக்கமான சூழல் உண்டாகும். தொழில் ரீதியாக நீங்கள் புதிய ஆட்களுடன் சேர்ந்து வேலை பார்க்கும் சூழல் வரலாம். இந்த வாரம் நிதி சம்பந்தமான முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும் முதலீடுகளை செய்ய வேண்டாம். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வீர்கள். பல நாட்களாக இருந்த நிலுவை கடன் தொகை, இந்த வாரத்தில் வந்து சேரலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முதலே பரபரப்பான வாரமாக இருக்கும். உங்களை நீங்கள் மேம்படுத்திகொள்ள பல விஷயங்களை ஆரம்பிப்பீர்கள். தொழில் ரீதியாக பல பொறுப்புகள் உங்களை தேடி வரலாம், அதில் கவனத்துடன் செயல்படுவது அவசியம். உங்களுக்கு நீண்ட நாட்களாக ஒருவர் செலுத்த வேண்டிய கடன் தொகை, அடுத்த வாரத்தில் வந்து சேரலாம். எதிர்பாராத கடல் கடந்த வேலை வாய்ப்புகள் உங்கள் கண்முன் வந்து நிற்கலாம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு முதல் வாரமே மகிழ்ச்சிகரமான வாரமாக இருக்கப்போகிறது. படைப்பற்றல் மிக்க பொழுது போக்குகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்வீர்கள். இந்த வாரம் உங்கள் துணையுடன் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை நீங்களே சரி செய்து விடுவீர்கள். நிதி நிலையை பொறுத்தவரை, நீங்கள் செய்த முதலீடுகளுக்கு பாசிடிவான ரிசல்ட் வரலாம். தொழில் ரீதியாக உங்களை நீங்கள் பெரிதாக வளர்த்துக்கொள்ள புதிய திறன்களை கற்றுக்கொள்வது நல்லது.
மேலும் படிக்க | 2024-ல் துரதிர்ஷ்டத்தை தலை முழுகும் 2 ராசிகள்! என்னென்ன தெரியுமா?
மகரம்:
மகர ராசிக்காரர்கள், புது வருடத்தின் முதல் வாரத்தை தங்களின் அன்புக்குரியவர்களுடன் செலவு செய்ய விரும்புவீர்கள். நீங்கள் செய்த வேலைக்கு ஏற்ற வெகுமதியை இந்த வாரத்தில் பெறலாம். உங்கள் நிதி நிலையை இன்னும் பெரிதாக வளர்த்துக்கொள்ள சில முதலீடுகள் உங்களுக்கு உதவலாம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அன்பு நிறைந்த வாரமாக இருக்கும். புதிய மனிதர்களை சந்திப்பதற்கும், அவர்கள் மூலம் பலனடைவதற்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக ஒரே நேரத்தில் அடுக்கடுக்காக பல வேலைகள் வரலாம். அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக முடித்துக்கொடுப்பது நல்லது. முதல் வாரத்திலேயே புதிதாக வாகனம் வாங்குவது அல்லது சொத்துகள் சேர்ப்பது குறித்து யோசிப்பீர்கள். புதிதாக தொடங்கிய சிறு தொழில் மூலம் எதிர்பாராத லாபம் பார்க்கவும் வாய்ப்புள்ளது.
மீனம்:
மீன ராசிக்கார்களுக்கு அடுத்த வாரம் வேலை நிறைந்த வாரமாக இருக்கும். இத்தனை நாட்களாக உங்கள் மனங்களில் மட்டும் இருந்த எண்ணங்களை செயல்களாக மாற்றுவீர்கள். உங்களை போல யோசிக்கும் சிலரை சந்திப்பீர்கள். இந்த வாரம் உங்கள் துணையுடன் நேரம் செலவிடுவது, இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும். எதிர்கால சேமிப்பு திட்டங்கள் குறித்து ஆராய்வீர்கள். வாரத்தின் ஆரம்பத்தில் செலவுகள் அதிகரித்தாலும், அதன் பின்னர் தனவரவு வர வாய்ப்புள்ளது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | 2025-ல் துரதிர்ஷ்டத்தையும் அதிர்ஷ்டமாக மாற்றலாம்! ‘இந்த’ பரிகாரம் செய்தால் போதும்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ