Saturn Transit 2025: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைத் தரும் சனிபகவான், மார்ச் 29, 2025 அன்று, கும்ப ராசியில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சியாகிறார். சனி பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
புத்தாண்டில் சனி, குரு உள்ளிட்ட பல முக்கிய கிரகங்கள் நிகழ இருக்கின்றனர் இதில் சனி பெயர்ச்சி மிக முக்கியமானதாக நிகழ்வாக இருக்கப் போகும் நிலையில், 12 ராசிக்காரர்களும் சனி பகவானின் அருளைப் பெற்று நற்பலனை அடையவும், ஏழரை நாட்டு சனி காலத்தில் இருப்பவர்கள் பாதிப்பு நீங்க புத்தாண்டில் செய்ய வேண்டிய ராசிக்கு ஏற்ற பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேஷம்: சனிபகவானை மகிழ்விக்க, ஹனுமனுக்கு வெற்றிலையில் மாலை கட்டி சாற்றுவது பலன் தரும். ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஹனுமனை பூஜித்து வழிபடுவதும், ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்வதும் பலன் தரும்.
ரிஷபம்: சனிபகவானின் மனதை குளிர்விக்க, ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வதும், துர்கா சப்தசதியை பாராயணம் செய்வதும் பலன் தரும். வாழ்க்கையின் தடைகள் அனைத்தும் நீங்கும்.
மிதுனம்: சனி பகவானை மகிழ்விக்க விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரரை வணங்கினால் நன்மை அடையலாம்/எறும்புகள் மற்றும் காகங்களுக்கு உணவளிப்பதும், ராம பக்தனான ஹனுமனை வணங்குவதும் பலன் தரும்.
கடகம்: சனிபகவானை மகிழ்விக்க, வன்னி மர செடியை நட்டு வணங்கி வரலாம். சிவலிங்கத்திற்கு பிரதோஷ காலத்தில் பூக்கள் அல்லது வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து, சங்கரரின் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபிப்பது பலன் தரும்.
சிம்மம்: சனிபகவானை மகிழ்விக்க ஒவ்வொரு அமாவாசையிலும் ஏழை பிராமணர்களுக்கு உணவளிக்கவும். இதனால் பித்ருக்கள் மற்றும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.
கன்னி: சனீஸ்வரனை மகிழ்விக்க, ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பசுவிற்கு தீவனம் கொடுக்க வேண்டும். சனி, செவ்வாய் கிழமைகளில் ஹனுமனை வழிபடுவதும் பலன் தரும்
துலாம்: ஏழரை சனியின் பாதிப்பு நீங்க, வைத்தியம் செய்ய முடியாமல் வருந்தும் ஏழை நோயாளிக்கும் சிகிச்சிஅ பெற உதவலாம். இது தவிர மருத்துவமனைக்குச் சென்று போர்வைகளை தானமாக வழங்க வேண்டும்.
விருச்சிகம்: குலதெய்வத்தின் பரிபூரண அருளாசி பெற்றவர்களுக்கு சனியால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாக குறையும் என்பது ஐதீகம். ஆற்றங்கரைக்குச் சென்று சனி பூஜை செய்து மீன்களுக்கு உணவு வழங்குவதும் பலன் தரும்.
தனுசு: ஏழரை சனி பாதிப்பு நீங்க, கோவிலை சுத்தம் செய்து, ஆன்மீக சேவை செய்யலாம். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதும் பலன் தரும். கரு நிற விலங்குகளுக்கு பறவைகளுக்கு உணவளிப்பதும் பலன் தரும்
மகரம்: விக்னங்களை தீர்க்கும் விநாயகரை பிரார்த்திப்போரை ஏழரை சனி பாதிக்காது என்பது ஐதீகம். அதோடு சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் நல்லது.
கும்பம்: கிரக பாதிப்புகள் அனைத்தையும் நீக்கும் கோளறு பதிகம் பாராயணம் செய்வது பலன் தரும். சனி பகவானை மகிழ்விக்க, ஏழை எளியவர்களுக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள்.
மீனம்: சனிபகவானை மகிழ்விக்க, சனிபகவான் ஸ்தோத்திரத்தை சனிக்கிழமை 11 முறை பாராயணம் செய்தால் சனியின் பாதிப்பு நீங்கும். சனியன்று விரதம் இருந்து, காகம், கருப்பு நிற பசு அல்லது கருப்பு நாய்க்கு உணவளிக்கவும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.