TVK Bussy Anand Arrest : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுச்செயலாளராக விளங்கும் புஸ்ஸி ஆனந்த் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் தவெக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரை சந்தித்த விஜய்!
நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று காலை ஒரு கடிதத்தை வெளியிட்டார். இந்த கடிதத்தில் அவர் தங்கைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரிதும் வேதனையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்தது அதற்காகவே இக்கடிதம் என்று குறிப்பிட்டிருந்தார். எல்லா சூழ்நிலையிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும்,அரணாகவும் பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியபடுத்துவோம் என்று அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
ஆளுநருடன் சந்திப்பு:
விஜய், இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையும் சந்தித்தார். அப்போது ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசளித்த அவர் தொடர்ந்து அவரிடம் கலந்துரையாடினார். விஜய், இந்த முறையாவது செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காரில் வந்து இறங்கி அப்படியே ஆளுநர் மாளிகைக்குள் அவர் சென்று விட்டதால் மக்களும் செய்தியாளர்களும் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
புஸ்ஸி ஆனந்த் கைது:
தவெக தலைவர் விஜய், இன்று ஆளுநரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இன்னொரு பரபரப்பான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அனுமதி இன்றி பொதுமக்களுக்கு விஜய் எழுதிய கடிதத்தை நோட்டீஸாக கொடுத்ததாக கூறப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள புஸ்ஸி ஆனந்தை தற்போது தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர், மாலை 6 மணிக்கு மேல் விடுவிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அண்ணனாக எப்போதும் துணை நிற்பேன்! விஜய் கைப்பட எழுதியுள்ள கடிதம்!
கேலி கிண்டலுக்கு ஆளான விஜய்!
நடிகர் விஜய் சினிமாவுக்கு குட்-பை சொல்லிவிட்டு தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியதில் இருந்தே செய்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை. விஜய் செய்யும் ஒவ்வொரு செய்கையும் சர்ச்சையானது. அவரது கட்சி மாநாடுக்கு பிறகு அவரது அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
மாநாட்டில் பேசிய தீப்பொறி பேச்சுகள் விஜய்யின் செயலில் தென்படவில்லை என்ற விமர்சனங்கள் விஜய் மீது எழ ஆரம்பித்தது. மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்க்காதது, மாநாட்டுக்கு வந்து உயிரிழந்தவர்களை வீட்டில் சென்று பார்க்காதது என பல விமர்சனங்கள் அவர் மீது எழுந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடந்த பல முக்கிய பிரச்சனைகளுக்கு வெறும் அறிக்கைகள் மூலம் மட்டுமே கண்டனங்களை தெரிவித்து வந்தார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல், அவர்களில் சிலரை வீட்டுக்கே அழைத்து நிவாரணம் வழங்கியதில் இருந்து, அரசியலில் பொர்க் பிரம் ஹோம் செய்யும் ஒரே தலைவர் விஜய் தான் என கேலி கிண்டலுக்கு ஆளானார். இப்படி அரசியலில் அவர் செயல்பாடுகள் சொதப்பி வருவதாக பேசப்பட்டது. விஜய், 2026ஆம் ஆண்டு தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், அடுத்த ஆண்டில் இருந்தே தனது அரசியல் வாழ்வில் மொத்தமாக ஈடுபட உள்ளார். இதற்கு ஒரு முன்னோட்டமாக ஆளுநரை சந்திப்பது போன்ற செயல்களை அவர் செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சொன்ன சொல் தவறும் விஜய்...? ஆளுநர் சந்திப்புக்கு பின்... அரசியல் களத்தில் சலசலப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ