Budget 2025: ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரியை குறைப்பது குறித்து அரசு யோசித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம், வருமான வரி செலுத்தும் கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்கள் பயனடையலாம். வரவிருக்கும் யூனியன் பட்ஜெட் 2025-26 நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கலாம் என்று ராய்ட்டர்ஸ் அரசு ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது.
வீட்டு வாடகைக்கான வருமான வரி விலக்கு போன்ற சில விதிவிலக்குகளை அனுமதிக்காத 2020 வரி முறையைத் தேர்ந்தெடுத்தால், மில்லியன் கணக்கான மக்கள் இந்த நடவடிக்கையிலிருந்து பயனடையலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னதாக இது குறித்து முடிவு எடுக்கப்படலாம். இந்தியாவின் வருமான வரியின் பெரும்பகுதி ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கும் தனிநபர்களிடமிருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு 30% வரி விதிக்கப்படுகிறது.
புதிய வரி முறை
புதிய வரி முறை யின் கீழ் ரூ. 3-15 லட்சத்துக்கு இடைப்பட்ட வருமானத்திற்கு 5-20% வரி விதிக்கப்பட்டது, அதைவிட அதிக வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படுகிறது.
ரூ. 3 லட்சம் வரை வருமானம்: 0% வரி
ரூ.3 லட்சம் – ரூ.7 லட்சம்: 5% வரி
ரூ.7 லட்சம் – ரூ.10 லட்சம் வரை வருமானம்: 10% வரி
ரூ.10 லட்சம் – ரூ.12 லட்சம்: 15% வரி
ரூ 12 லட்சம் – ரூ.15 லட்சம்: 20% வரி
ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம்: 30% வரி
மேலும் படிக்க | RBI புதிய விதி 2025: ஜனவரி 1 முதல் இந்த 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்!
இந்திய வரி செலுத்துவோர், தங்கள் விருப்பப்படி, பழைய வரி முறை, புதிய வரி முறை ஆகிய இரண்டு முறையில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். பழைய வரி முறையின் கீழ் வாடகை மற்றும் காப்பீட்டில் உள்ளிட்வைகளுக்கு வரி விலக்குகளைப் பெறலாம். ஆனால், புதிய வரி முறையில் குறைந்த வரி விகிதங்கள், என்றாலும், விலக்குகள் இல்லை. புதிய வரி முறை எளிமையானதும் கூட.
பட்ஜெட் 2025 தாக்கலில் நகர்ப்புற நுகர்வு மற்றும் நடுத்தர வர்க்க நிவாரணத்தில் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது. நிதி அமைச்சகம் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கான ஆயத்தங்களைத் தொடங்கியுள்ளது. இந்திய நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படும் பட்ஜெட் நகர்ப்புற நுகர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும். வரிச் சலுகைகள் அறிமுகப்படுத்தப்படலாம், மேலும் வரி அடுக்கு விகிதங்களில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரியைக் குறைக்க வேண்டும் என்பதை அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அறிக்கை கூறுகிறது. மேலும், மேலும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த, நடுத்தர வர்க்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அதிக உணவு விலைகள், சோப்பு மற்றும் ஷாம்பு போன்ற அடிப்படை பொருட்களிலிருந்து கார்கள் வரை, குறிப்பாக நகரங்களில் பல பொருட்களின் டிமண்டை பாதிக்கின்றன எனவும் கூறுகின்றனர். தற்போதைய காலகட்டத்தில், அரசாங்கம் நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி சுமையை கொடுக்கிறது என்ற புகாரை சந்தித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பொங்கல் 2025: இலவச வேட்டி, சேலை குறித்து தமிழக அரசு புதிய உத்தரவு! மக்கள் மகிழ்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ