சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதம் தான்... இனி மகிழ்ச்சி மட்டுமே!

Saturn Retrograde 2023: கும்பத்தில் சனியின் வக்ர நிலை இயக்கம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குறிப்பாக, இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் வரப்பிரசாதமாக அமையும் என்றே கூறலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 11, 2023, 02:50 PM IST
  • வரும் ஜூன் 17ஆம் தேதி சனி பகவான் வக்ர நிலையை அடைகிறார்.
  • வரும் நவம்பர் 4ஆம் தேதி வரை சனி இதே நிலையில் தொடர்வார்.
  • இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதம் தான்... இனி மகிழ்ச்சி மட்டுமே! title=

Saturn Retrograde 2023: ஜோதிடத்தின் படி, நீதியின் கடவுளான சனி, விரைவில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போகிறார். வரும் ஜூன் 17ஆம் தேதி முதல், சனி பகவான் கும்பத்தில் வக்ர நிலையை அடைகிறார். வரும் நவம்பர் 4ஆம் தேதி வரை, வக்ர நிலையில் தொடரும். 

சனி கும்பத்தில் வக்ர நிலையில் இருப்பது அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். சனியின் வக்ர நிலை இயக்கம் இந்த முறை மிகவும் முக்கியமானது, ஏனெனில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி அதன் சொந்த ராசியான கும்பத்தில் உள்ளது. மேலும், வக்ர நிலையிலும் இருக்கிறார்.

சனியின் வக்ர நிலை இயக்கம் அதிக தொல்லை தருவதாகவும், வேலைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் நம்பப்படுகிறது. எனவே இந்த நேரத்தை பொறுமையாக இருக்க வேண்டும். ஆனால் கும்பத்தில் சனியின் வக்ர நிலை இயக்கம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் வரப்பிரசாதமாக அமையும் என்றே கூறலாம். 

மேலும் படிக்க | சுக்கிரனால் 'திடீர்' உச்சத்தை பெறப்போகும் இந்த 3 ராசிகள்!

சனியின் வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்

மேஷம்

சனியின் வக்ர நிலை பெயர்ச்சி, மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இவர்கள் வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்கள். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். திடீரென்று எங்கிருந்தோ பெறப்பட்ட பணம் உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும்.

ரிஷபம் 

சனியின் வக்ர நிலை இயக்கம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட பணிகள் அனைத்தும் முடிவடையும். சனிபகவானின் அருளால் உங்களின் எந்த ஒரு பெரிய ஆசையும் நிறைவேறும். உத்தியோகத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிலை பெரும் வெற்றியைத் தரும். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். பண பலன்கள் சாதகமாக இருக்கும். சில வேலைகளை முடிப்பதால் மனநிம்மதியும் மனநிறைவும் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவான் இந்த 5 மாதங்களுக்கு நிறைய பலன்களைத் தருவார். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்கும். எந்த ஒரு பெரிய பிரச்சனையும் தீரும். வீடு-சொத்து வாங்கலாம். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். இருப்பினும், இந்த நேரம் சிலருக்கு சவாலாக இருக்கலாம், எனவே அவர்கள் புரிந்துணர்வுடனும் பொறுமையுடனும் பணியாற்ற வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புத-ஆதித்ய யோகத்தினால் ராஜயோகத்தை அனுபவிக்க உள்ள ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News