பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனமா? ஆன்மிகம் கூறும் பதில்!

கருப்பு பூனை குறுக்கே வந்தால் பலர் அதை கெட்ட சகுனமாக கருதுவதுண்டு. இது உண்மை தானா? ஜோதிடம் கூறுவது என்ன?  

Written by - Yuvashree | Last Updated : Dec 23, 2023, 01:12 PM IST
  • கருப்பு பூனை எதிரில் சென்றால் அபசகுணம் என்று கருதப்படுகிறது.
  • பூனைகளுக்கு எதிர்மறை ஆற்றல்கள் இருக்கின்றன.
  • இது அபசகுனமா?
பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனமா? ஆன்மிகம் கூறும் பதில்! title=

உலகம் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே வருகிறது. டிவி யுகத்தில் இருந்து கிட்டத்தட்ட அதிகம் பேர் டிஜிட்டல் யுகத்திற்கு மாறிவிட்டனர். இருப்பினும் நம்மில் பலர் இன்னும் பழைய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கதைகளையும், நம்பிக்கைகளையும் பின்பற்றி வருகிறோம். 

தங்களை அறியாமல் மக்கள் பின்பற்றும் நம்பிக்கைகள்..

மக்கள், எத்தனை நாட்கள் ஆனாலும் பழங்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். கண்ணாடி உடைந்தால் வீட்டில் துரதிர்ஷ்டம் வரும், இருட்டியதற்கு பிறகு வீட்டை பெருக்க கூடாது, வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது, முடி வெட்ட கூடாது போன்று பல பழக்கங்களை பின்பற்றுகின்றோம். இவற்றில் சில மூட நம்பிக்கைகளாக இருக்கின்றன. இது போன்ற நம்பிக்கைகளுள் ஒன்று, பூனை குறுக்கே சென்றால், எதற்காக வெளியில் செல்கிறோமோ அது விளங்காது என்பதுதான். 

என்னதான் நாம் நம்மை பகுத்தறிவாளியாக காட்டிக்கொண்டாலும், மூட நம்பிக்கைகளை நம்பாதவராக இருந்தாலும், முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும் போது பூனை எதிரில் வந்தால் மட்டும் ‘அடடா...போகும் காரியம் விளங்குமா..?” என்ற எண்ணம் தோன்றிவிடும். இப்படி பூனை குறுக்கே செல்லும் போது அது அபசகுணமா இல்லையா என்பது பலருடைய சந்தேகம். இதனால், பூனை சென்றுவடன் சிறிது நேரம் கழித்துதான் நம் பயணத்தை தொடங்குவோம். பூனை இப்படி குறுக்கே செல்வதை அபசகுணம் என்று நம்பலாமா வேண்டாமா? 

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்!

பூனைகளின் குணம்…

பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய் மற்றும் பூனைகளைத்தான் வைத்திருப்போம். ஆனால், பூனைகள் நாய்களிடம் இருந்து வேறுபட்டவை. இவை பல சமயங்களில் தனித்தே செயல்படும். எல்லா பூனைகளும் அப்படி இல்லை என்றாலும் பெரும்பாலான பூனைகள், அப்படித்தான் இருக்கின்றன. இவற்றில் சில தனது உரிமையாளருக்கு என்ன ஆனாலும் கவலைப்படுவதில்லை. பூனைகளின் இது போன்ற குணநலன்கள் வீட்டிற்கு எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்தியாவை தவிர இன்னும் பிற நாடுகளில் கூட பூனையை வெளியே செல்வதற்கு முன்பு பார்ப்பது அபசகுணமாக கருதப்படுகிறது. 

குறிப்பாக, கருப்பு பூனையை பார்த்து விட்டால் சிலர் பயந்து தெரித்து ஓடுவதுண்டு. ஜோதிடத்தின் படி, கருப்பு நிறத்தை சனி பகவானுடன் பலர் தொடர்பு படுத்திக்கொள்வதுண்டு. கருப்பு பூனை பாதையில் குறிக்கிட்டால் அந்த இடத்தை விட்டு நீங்கள் கடந்து செல்லும் முன்பு, வேறு யாரும் அந்த இடத்தை கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும். இதனால், உங்களுக்கு எந்த வித எதிர்மறை பாதிப்புகள் இருக்காது. கருப்பு பூனை எதிரில் இருப்பதால் சனி மற்றும் ராகுவின் கோபம் உங்களது வேலையை தடுக்கும் என கூறப்படுகிறது. இதனால், பூனை சென்ற பின்பு அந்த இடத்தை கடந்து செல்வதற்கு முன்பும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். இது பெரிய அபசகுணமாக கருதப்படவில்லை என்றாலும், உங்கள் வழியில் கவனமாக இருக்க வேண்டியது நல்லது. 

மேலும் படிக்க | 12 ஆண்டுக்குப் பிறகு உருவாகும் சக்திவாய்ந்த அபூர்வ ராஜயோகம், இந்த ராசிகளுக்கு பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News