சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 2025 வரை பொற்காலம், தொட்டதெல்லாம் வெற்றி!!

Sani Peyrachi Palangal: சனி பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 22, 2023, 07:07 PM IST
  • சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார்.
  • 2025 வரை சனி இந்த ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறார்.
  • இப்படிப்பட்ட சூழ்நிலையில் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.
சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 2025 வரை பொற்காலம், தொட்டதெல்லாம் வெற்றி!! title=

கும்பத்தில் சனி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தின் படி, சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல மொத்தம் இரண்டரை வருடங்கள் ஆகும். இந்த வருடம் ஜனவரி மாதம் கும்ப ராசியில் சனி நுழைந்தார். அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் இருப்பார். சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிப்பதால் அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கபப்டுகிறார். 

ஒரே ராசியில் சனி அதிக காலத்திற்கு இருப்பதால் அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கும். ஒரு நபரது ஜாதகத்தில் சனி சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர் அனைத்து வித சுக போகங்களையும், வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதே சமயம் அவர் அசுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் பல வித பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சனி பெயர்ச்சி (Saturn Transit) அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் பொன்னும் பொருளும் சேரும். இந்த ராசிக்காரர்கள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிகளுக்கு சனி பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்

கும்ப ராசி (Aquarius)

இப்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். 2025 வரை சனி இந்த ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறார். இது தவிர, கும்ப ராசியில் ஷஷ என்ற ராஜயோகமும் உருவாகி வருகிறது. இதன் தாக்கத்தால் உங்கள் ஆளுமை மேம்படும். சமூகத்தில் மரியாதை, கௌரவம் உயரும். பெரியவர்களுடன் உறவை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் வெற்றி உண்டாகும். சனி உங்கள் 12ம் வீட்டிற்கு அதிபதி. இதன் காரணமாக, நீங்கள் பணத்தை சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள். 

மேலும் படிக்க | சுக்கிரன், சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு தீபாவளிக்கு முன் செல்வ மழை

துலா ராசி (Libra) 

சனிபகவானின் ராசி மாற்றம் துலா ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருக்கப்போகிறார். இதுபோன்ற சூழ்நிலையில் குழந்தைகள் தரப்பில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். உங்கள் பிள்ளைக்கு வேலை கிடைக்கலாம் அல்லது திருமணம் தொடர்பான சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். காதல் உறவுகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் பங்குச் சந்தை, பந்தயம் மற்றும் லாட்டரி மூலம் எதிர்பாராத லாபம் பெறலாம். சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டின் அதிபதியாக உள்ளார். இந்த காலத்தில் வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். 

மிதுன ராசி (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல அனுபவம் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உச்சம் செல்லும் சனி.. இந்த ராசிகளுக்கு செல்வ செழிப்புடன் குபேர யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News