அக்டோபர் 31 வரை இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள்

அக்டோபர் மாதம் பல ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். அக்டோபர் 31 வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் வரலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 6, 2022, 11:44 AM IST
  • கிரக மாற்றம் அக்டோபர் 2022
  • அக்டோபர் 31 வரை இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள்
  • அக்டோபர் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் மாறும்
அக்டோபர் 31 வரை இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. கிரகங்களின் இந்த செயல்முறை கிரக மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அக்டோபர் மாதத்தில் பல கிரகங்களின் சஞ்சாரத்தில் மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். எனவே அக்டோபர் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் மாறும், யாருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அக்டோபர் மாதத்தில் கிரகப் பெயர்ச்சி
மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: அக்டோபர் 16, 2022
சூரியன் துலாம் ராசியில் நுழைகிறார்: 17 அக்டோபர் 2022
சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைகிறார்: 18 அக்டோபர் 2022
சனி மகர ராசிக்குள் நுழைகிறது: 23 அக்டோபர் 2022
புதன் துலாம் ராசிக்குள் நுழைகிறது: 26 அக்டோபர் 2022
மேஷத்தில் குரு வியாழன் பெயர்ச்சி: 28 அக்டோபர் 2022
சனி மகர ராசிக்குள் நுழைகிறது: 23 அக்டோபர் 2022

மேலும் படிக்க | மாறுகிறது சனியின் பாதை: இந்த ராசிகளின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் 

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

புதன் பெயர்ச்சியின் பலன்- புதன் மார்கியாக இருப்பது ரிஷபம் மற்றும் துலாம் ராசியினருக்கு நன்மை பயக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். வருமானம் கூடும்.

செவ்வாய் கிரகப் பயணத்தின் விளைவு- மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது மேஷம் மற்றும் மீன ராசியினருக்கு நல்ல நாட்களைக் கொண்டு வரும். பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

சூரியன் ராசி மாற்றத்தின் பலன்கள்- சிம்மம் மற்றும் மகர ராசிக்காரர்கள் சூரியன் ராசி மாற்றத்தால் பெரும் பலன் பெறுவார்கள். பணியிடத்தில் பணிகளை முடிக்க சக ஊழியர்கள் உதவலாம். உங்கள் பணியில் மேலதிகாரி மகிழ்ச்சி அடைவார்.

சுக்கிரன் ராசி மாற்றம்- துலாம் ராசிக்கு சுக்கிரனின் வருகை மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்பு வரலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | விருச்சிக ராசியில் நுழையும் சுக்கிரன், இந்த 6 ராசிகளுக்கு பண வரவு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News