ராகுவின் நட்சத்திரத்தில் சனி: இந்த ராசிகளுக்கு அக்டோபர் வரை ஹை அலர்ட் காலம், எச்சரிக்கை தேவை

Shani Nakshatra Peyarchi: சனியின் நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை தரும். அக்டோபர் 2023 வரை இந்த ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2023, 11:07 AM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு சதய நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி பல பிரச்சனைகளை தரும்.
  • இந்த ராசியின் மீது ஏழரை நாட்டு சனியின் தாக்கமும் உள்ளது.
  • அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ராகுவின் நட்சத்திரத்தில்  சனி: இந்த ராசிகளுக்கு அக்டோபர் வரை ஹை அலர்ட் காலம், எச்சரிக்கை தேவை title=

சனி நட்சத்திர பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: சனி பகவான் தற்போது அதன் சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார். அவர் சமீபத்தில்தான் நட்சத்திர பெயர்ச்சி செய்து ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் நுழைந்தார். ராகு சதய நட்சத்திரத்தின் அதிபதியாவார். தற்போது சனி ராகுவின் நட்சத்திரத்தில் நுழைந்துள்ளதால் ஒரு வகையில் ராகு சனி சேர்க்கை நடந்துள்ளது. ராகு மற்றும் சனியின் இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான மாற்றங்கள் காணப்படும். 

அக்டோபர் 17 வரை சனிபகவான் சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் இருப்பார், இந்த பாதத்தின் அதிபதி வியாழன் ஆவார். சனியின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை தரும். அக்டோபர் 2023 வரை இந்த ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு சதய நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி பல பிரச்சனைகளை தரும். இந்த ராசியின் மீது ஏழரை நாட்டு சனியின் தாக்கமும் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிகரித்த செலவுகள் நிதிநிலையை கெடுக்கும். உத்தியோகத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். இரகசிய எதிரிகள் உங்களை தொந்தரவு செய்யலாம். மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது.

கன்னி: 

சனியின் நட்சத்திர மாற்றம் கன்னி ராசியினருக்கு பொருளாதாரச் சிக்கலைத் தரும். ஆகையால் பண பரிவர்த்தனைகள் தொடர்பான முடிவுகளை நன்றாக யோசித்த பிறகே எடுக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் மனவருத்தம் ஏற்படலாம். கடன் வாங்க வேண்டி வரலாம். உடல்நலம் விஷயத்தில் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் சிறிய பிரச்சனை கூட பெரியதாகிவிடும்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம்!

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்கார்ரகளுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை தரும். உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஊதாரித்தனம் அதிகரித்துக் கொண்டே போகும். உறவுகளில் நல்லிணக்கத்தைப் பேணுங்கள். இல்லையெனில் தகராறு ஏற்படலாம். மரியாதை இழப்பு ஏற்படலாம்.

கும்பம்: 

கும்ப ராசிக்கு அதிபதியான சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகுவின் நட்சத்திரத்தில் சனி செல்வதால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் உள்ள மின்சாதனங்கள் மீண்டும் மீண்டும் பழுதடையும். செய்யும் வேலை கூட கெட்டுவிடும். ஆகையால் அனைத்து பணிகளையும் மிக கவனமாக செய்ய வேண்டிய நேரம் இது.

மீனம்: 

மீன ராசிக்கார்ரகள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தின் கீழ் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், ராகுவின் நட்சத்திரத்தில் சனி இருப்பதால், அக்டோபர் வரை மீன ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். சில பொருட்களை இழக்கும் வாய்ப்பு உள்ளது. விபத்து-நோய்களில் இருந்து விலகி இருங்கள். வாகனம் ஓட்டும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியில் இருந்து தப்பிக்க... வீட்டில் வன்னி மரச்செடியை நடவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News