சூரியனுடன் சனி இணைந்தால் கோடீஸ்வரனும் குப்பை மேட்டிற்கு வரலாம்! சிக்கல்களை தீர்க்க பரிகாரங்கள்!

Sun Saturn Conjunction Remedies: பிப்ரவரி 13 முதல் கும்ப ராசியில் இணையும் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 13, 2024, 09:34 PM IST
  • கும்ப ராசியில் இணையும் சூரியன் மற்றும் சனி
  • தந்தை - மகன் சேர்க்கையினால் ஏற்படும் பிரச்சனைகள்
  • 12 ராசிகளுக்குமான ஜோதிட பரிகாரங்கள்
சூரியனுடன் சனி இணைந்தால் கோடீஸ்வரனும் குப்பை மேட்டிற்கு வரலாம்! சிக்கல்களை தீர்க்க பரிகாரங்கள்! title=

Sun Saturn Conjunction 2024: இன்று சூரியன் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைந்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ள சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை அசுப யோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை மோசமானதாகவே இருக்கும்.

தந்தையும் மகனுமான சூரியன் மற்றும் சனி கிரகங்களின் சேர்க்கையின் மோசமான தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும் என்று சொன்னாலும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும். எப்படியிருந்தாலும், சனியும் சூரியனும் சேர்வதால், குடும்பத்தில் தந்தைக்கும் மகனுக்குமான உறவுகள் மோசமடையலாம். 

குடும்பத்தில் உறவுகளை சனியும் சூரியனும் சேர்ந்து கெடுக்காமல் இருக்க சில பரிகாரங்களை செய்தால் நிவாரணம் கிடைக்கும். 

மேஷ ராசிக்காரர்கள், சூரியன் மற்றும் சனி இணைவதால் ஏற்படும் கெடுபலன்களைத் தவிர்க்க, 11 ஞாயிற்றுக்கிழமைகள் விரதம் இருப்பது நல்லது. காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

ரிஷப ராசிக்காரர்கள், சூரியபகவானின் மந்திரத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை, சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள்.

மேலும் படிக்க | Sun Transit: கும்பத்தில் சூரியன்: இந்த ராசிகள் மீது பண மழை... செல்வச்செழிப்பில் திளைப்பார்கள் 

மிதுன ராசிக்காரர்கள், சிவப்பு நிற ஆடைகளை ஏழைகளுக்கு தானம் செய்தால் குடும்பத்தில் சுமூக உறவு நிலவும். 

கடக ராசிக்காரர்கள், சூரிய மந்திரத்தை தினமும் சொல்லி சூரியனை வணங்கவும். சனிக்கிழமைகளில் எள் தீபம் போடவும். சூரிய நமஸ்காரம் செய்யும்போது சூரியனுக்கு அர்க்கியம் செய்யவும்.

சிம்ம ராசிக்காரர்கள், தங்கள் ஜாதகத்தில் சூரியனின் நிலையை வலுப்படுத்த வேண்டும். எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் உப்பு சேர்த்து உண்ண வேண்டாம். 

கன்னி ராசிக்காரர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் தயிர், பால், சர்க்கரை, நெய், கோதுமை போன்ற உணவுகளை உட்கொள்வது சூரியனின் நிலையை பலப்படுத்தும். 

துலாம் ராசிக்காரர்கள், 11 ஞாயிற்றுக்கிழமைகள் வெல்லம் தானம் செய்யலாம், இது ஜாதகத்தில் சூரியனின் நிலையை வலுப்படுத்தும்.

விருச்சிக ராசிக்காரர்கள் சூரியனின் நிலையை வலுப்படுத்த சிவப்பு நிர ரத்தினத்தை அணியுங்கள்.

மேலும் படிக்க | கும்பத்தில் நிகழும் சனி-சூரிய சேர்க்கை.. இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது

சூரியன்-சனி இணைவதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க பல்வேறு தீர்வுகள் இருந்தாலும் இறை வழிபாடு ஒன்றே தீர்வு என்பதை விருச்சிக ராசிக்காரர்கள் மறந்துவிடக்கூடாது.

தினமும் சூரிய பகவானுக்கு நமஸ்காரம் செய்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்லது. அதிலும், சூரியனுக்கு உரிய மந்திரங்களை உச்சரிக்கவும்.

மகர ராசிக்காரர்கள் சனிக்கிழமை நாட்களில் அனுமன் வழிபாடு செய்வது நல்லது.  

பிப்ரவரி 13, 2024 அன்று சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் கும்ப ராசியினருக்கு ஏற்படும் விளைவில் இருந்து அவர்களை பாதுகாக்க சூரிய வழிபாடு மிகவும் அவசியமானது. ஏனென்றால், இந்த வீட்டுக்கு அதிபதியான சனியை விட சூரியன் தற்போது அதிக சிரமங்களைக் கொடுப்பார் என்பதால், சூரிய வழிபாட்டில் குறை வைக்க வேண்டாம்.

மீன ராசிக்காரர்களுக்கு சூரியனுடன் சனி சேர்வது நல்லதைக் கொடுக்கும் என்றாலும், பண விஷயங்களில் பிரச்சனை வராமல் இருக்க, லட்சுமி தேவியை வழிபடுவது நல்லது.

மேலும் படிக்க | shukra gochar 2024: மார்ச் மாதம் சுக்கிரன் உச்சம்.. இந்த 5 ராசிகளுக்கு ராஜ கோடீஸ்வர வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News