சூரிய கிரகணம் 2024: தேதி, நேரம் எப்போது தெரியுமா? எந்த ராசிக்கு ஜாக்கிரதை

Surya Grahanam 2024: இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் எப்போது, எங்கு நிகழப்போகிறது, மேலும் இந்த கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிகமாக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளாலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 29, 2024, 03:24 PM IST
  • சூரியகிரகணம் எப்போது, எங்கு நிகழப்போகிறது?
  • எந்தெந்த ராசிக்காரர்கள் அதிகமாக ஜாக்கிரதை தேவை?
  • உலகில் ஏற்படவுள்ள அரிய சூரிய கிரகணம்.
சூரிய கிரகணம் 2024: தேதி, நேரம் எப்போது தெரியுமா? எந்த ராசிக்கு ஜாக்கிரதை title=

Surya Grahanam 2024: வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரி பண்டிகையைக்கு முன்னதாக இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழப் போகிறது. அதுமட்டுமின்றி இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படாது. இருப்பினும், ஜோதிடத்தில், கிரகணம் அசுபமாக கருதப்படுகிறது. கிரகணம் கண்டிப்பாக அனைத்து ராசிகளையும் பாதிக்கும். சில ராசிக்கு சாதகமான பலன் தந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு பாதக பலனைத் தரக்கூடும். எனவே, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்போது நிகழும் என்பதையும், எந்த ராசிக்காரர்கள் மீது பாதிப்பு இருக்கும், மேலும் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சூரிய கிரகணம் எப்போது நிகழும்? | Solar Eclipse Date and Time
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்குகிறது. இந்த கிரகணத்தின் உச்சம் இரவு 11.47 மணிக்கு நிகழ்கிறது.. கிரகணம் நள்ளிரவு 2.22 மணிக்கு முடிவடைகிறது.

சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது? | How does a solar eclipse occur?
சூரியன் - பூமிக்கு இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால், சூரியனின் ஒளி மறைக்கப்படும் நிகழ்வு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஆண்டியை அரசனாக்கும் விபரீதராஜ யோகம்... பலனை அடையும் ராசிகள் இவை தான்..!

சூரிய கிரகணம் எங்கெல்லாம் பார்க்கலாம்? | Which countries get to see the celestial event 
வட அமெரிக்கா, தென் அமெரிக்காவில் வடக்கு, பசிபிக், அட்லாண்டிக், ஆர்க்டிக், ஐரோப்பாவில் மேற்கு நாடுகளிலும் இந்த கிரகணம் பார்க்க முடியும்.

இது ராசிக்காரர்களை சூரிய கிரகணம் பாதிக்கும்:
கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களுக்கு கிரகணம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். காயம் ஏற்படலாம். கிரகண காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும். நிதி இழப்பு நேரிடலாம். குடும்பத்தினரின் உடல்நிலை பாதிக்கப்படுவதால், மருத்துவ செலவு அதிகமாகும். புதிதாக பொருள் ஏதும் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசிக்காரர்களுக்கு கிரகணத்தால் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உடல்நலம் பாதிக்கப்படலாம். தாயின் உடல்நிலை மோசமடையலாம். நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் தகராறு ஏற்படலாம்.

கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசியினருக்கு சூரிய கிரகணம் அசுப பலன்களை கொடுக்கும். வேலையில் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவும். எதிர்பாராத முடிவுகள் ஏமாற்றத்தை கொடுக்கலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்க்கவும்.

மீனம் (Pisces Zodiac Sign): இந்த நாளில் மீன ராசிக்கு எதிர்மறையாக இருக்கும். மன அமைதி குலையும். மனதில் மன அழுத்தம் ஏற்படலாம். உடல்நிலையும் மோசமடையலாம். முக்கிய முதலீடுகள் எதையும் செய்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கேந்திர திரிகோண ராஜயோகம்... இந்த ராசிகளுக்கு 10 நாட்களில் நல்ல செய்தி கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News