ரோட்டு கடையை தும்சம் செய்த காட்டு யானை, கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ

Elephant Attack Video: சமீபத்தில் வைரலான இந்த அதிர்ச்சி வீடியோவில், ஒரு பெரிய யானை திடீரென ஒரு கடையைத் தாக்குவதைக் காணலாம், அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 13, 2023, 11:46 AM IST
  • மதப்பிடித்த யானையின் வைரல் வீடியோ.
  • கடையை தும்சம் செய்த யானை.
  • இன்றைய வைரல் வீடியோ.
ரோட்டு கடையை தும்சம் செய்த காட்டு யானை, கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ title=

யானைகள் தாக்குதல் வீடியோ: மாறிவரும் காலக்கட்டத்தில் பல வகையான மாற்றங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில நல்லவை, சில மாற்றங்கள் பேரழிவை ஏற்படுத்துகின்றன. அதன்படி தற்போது தொடர்ந்து குறைந்து வரும் காடுகள் மற்றும் வளர்ந்து வரும் நகரங்களால் விலங்குகளின் வாழ்க்கை கடினமாகத் தொடங்கியுள்ளது, இதனால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், சில நேரங்களில் காட்டு விலங்குகள் அமைதியாக இருக்கும், சில நேரங்களில் அவை கடுமையான வடிவத்தில் அழிவை உருவாக்குகின்றன. சமீபத்தில், அப்படி ஒரு வீடியோ வெளியாகி உள்ளது, அதைப் பார்த்து நீங்களும் அதிர்ந்து போவீர்கள். அந்த வீடியோவில், யானை ஒன்று திடீரென ஒரு கடையை தாக்கியது, அதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது.

வீடியோவை இங்கே காணுங்கள்

மேலும் படிக்க |  'அம்மா.. நான் போக மாட்டேன்' : அழ வைக்கும் குரங்கின் வைரல் வீடியோ

மேலும் படிக்க | அட கடவுளே..4 வயது சிறுவனை தூக்கிய காளை..மனதை பதற வைரக்கும் வீடியோ

இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவில், ஒரு பெரிய யானை திடீரென ஒரு கடையைத் தாக்குவதைக் காணலாம். யானை தாக்கியதையடுத்து, அங்கிருந்த மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. யானை வேகமாக தம்மை நோக்கி வருவதைக் கண்டு அங்கிருந்தவர்கள் பயந்து அங்கும் இங்கும் ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்வதை காணொளியில் காணலாம். அப்போது, ​​ஆத்திரத்தில் யானை அங்கிருந்த ஒரு ஸ்கூட்டியை நசுக்கியது. இதன்போது, ​​யானையிடம் இருந்து தப்பித்து கடைக்குள் நுழைய மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான Instagram இல் repto_pedia என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது, இந்த வீடியோ அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது. வீடியோவைப் பகிரும் போது, ​​'சந்தையில் கோபமடைந்த யானை தாக்குகிறது' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | கத்தியை தீட்டி பட்டையை கிளப்பும் கேங்க்ஸ்டர் குரங்கு: விக்கித்து போன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News