நண்பேண்டா... மானுக்கு ‘கிளை’ கொடுத்த குரங்கு... இணையவாசிகள் மனம் கவர்ந்த வீடியோ!

Viral Video: குரங்குக்கும் மானுக்கும் இடையிலான நட்பின் ஆழத்தை காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 13, 2022, 04:58 PM IST
  • சில வீடியோக்கள் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன
  • இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ.
  • குரங்குக்கும் மானுக்கும் இடையிலான நட்பின் ஆழத்தை காட்டும் வீடியோ.
நண்பேண்டா... மானுக்கு ‘கிளை’ கொடுத்த குரங்கு... இணையவாசிகள் மனம் கவர்ந்த வீடியோ! title=

சமூக வலைதளங்களில் மக்களை ஆச்சரியப்படுத்தும் பல வீடியோக்களை நாம் பார்க்கிறோம். இவை நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் கவனம் பெற்று வருகின்றன. இந்த வீடியோக்களில் சிலவற்றை பார்த்தால் வியப்பு மேலிடும். சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. விலங்கு வீடியோக்களுக்கு ஏராளமான பார்வையாளர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வைரலான வீடியோவில் மான் மற்றும் குரங்கு இடம்பெற்றுள்ளது. மான்கள் தங்கள் உணவைத் தேடி நடக்கின்றன. இதற்கிடையில், குரங்கு, மானுக்காக மரக்கிளையை கீழே இறக்குவதை வீடியோவில் காணலாம். மரத்தில் உள்ள இலைகளை மான்கள் உண்ண முற்படுகையில், குரங்கு அவர்களுக்காக உயரமான கிளையை கீழே இறக்குகிறது.

மானுக்கு உதவி செய்யும் குரங்கின் வைரல் வீடியோவைக் கீழே காணலாம்:

 

 

நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கும் மான் மற்றும் குரங்கின் செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். குரங்குக்கும் மானுக்கும் இடையிலான நட்பை விவரிக்கும் வகையிலான காட்சி என அந்த வீடியோ தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 53.2 ஆயிரம் பேர் ஏற்கனவே வீடியோவைப் பார்த்துள்ளனர். 28 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவும் பலரால் விரும்பி பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குரங்குக்கும் மானுக்கும் இடையே உள்ள நட்பை பெரும்பாலானோர் பாராட்டினர்.

மேலும் படிக்க | Viral Video: சிங்கத்திடம் தப்பி முதலையிடம் மாட்டிக் கொண்ட எருமை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News