Viral Video: இனி இந்த பக்க தலை வச்சு படுக்க கூடாது... சிறுத்தையை ஓட விட்ட கலை மான்!

வீடியோவில் சிறுத்தை மற்றும் கலைமான் இரண்டுக்கும் இடையே ஆக்கிரோஷமான சண்டை நடப்பதைக் காணலாம். இரண்டும் பரஸ்பரம் கடுமையாக சண்டையிட்டு கொள்கின்றன. பொதுவாக சிறுத்தை மானை எளிதாக கபளீகரகம் செய்து விடும். ஆனால், இங்கு நடப்பதே வேறு.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 6, 2023, 06:23 PM IST
  • சிறுத்தை புலி மீண்டும் மீண்டும் பந்தயம் கட்டி மானை அடிக்க முயல்கிறது.
  • சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ
  • சிறுத்தை மற்றும் கலைமான் இரண்டுக்கும் இடையே ஆக்கிரோஷமான சண்டை .
Viral Video: இனி இந்த பக்க தலை வச்சு படுக்க கூடாது... சிறுத்தையை ஓட விட்ட கலை மான்! title=

வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில் சிறுத்தை மற்றும் கலைமான் இரண்டுக்கும் இடையே ஆக்கிரோஷமான சண்டை நடப்பதைக் காணலாம். இரண்டும் பரஸ்பரம் கடுமையாக சண்டையிட்டு கொள்கின்றன. பொதுவாக சிறுத்தை மானை எளிதாக கபளீகரகம் செய்து விடும். ஆனால், இங்கு நடப்பதே வேறு இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சிறுத்தை போன்ற விலங்குக்கு கலைமான் அசராமல் போட்டி கொடுப்பதுதான். சிறுத்தையை எப்படி மான் லாவகமாக கையாளுகிறது என்பதை வீடியோவில் தெளிவாக பார்க்கலாம். 

சிறுத்தை கலைமான் இடையிலான போராட்டத்தை காட்டும் வீடியோவை இங்கே பாருங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Martin (@kimathiweru)

சிறுத்தை புலி மீண்டும் மீண்டும் பந்தயம் கட்டி மானை அடிக்க முயல்கிறது, ஆனால் மான் அதற்கு வாய்ப்பு தரவில்லை. அதாவது, விவேகத்துடன் போராடினால் வெற்றி உங்களுக்கே சேரும் என்பதை இந்த வீடியோ சொல்கிறது. இந்த வீடியோவில் உள்ளதைப் போலவே கலைமான் மிகவும் சாதுர்யமாக சண்டையிடுவதை நீங்கள் காணலாம். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை 29 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். அந்த வீடியோவில் சுற்றுலா வந்த மக்கள் ஜூப் சஃபாரில் வருவதைக் காணலாம். வனவிலங்குகளை மதிக்காத இந்த கட்டுக்கடங்காத சுற்றுலா/வனவிலங்கு வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: குறட்டை விடும் ஹம்மிங் பறவை... காணக் கிடைக்காத வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News