கண்ணாடியை பார்த்து சண்டையிடும் பூனை! வைரலாகும் வீடியோ!

பூனை ஒன்று கண்ணாடியில் தெரியும் தனது உருவத்தை பார்த்து வேறொரு பூனை என்று சண்டைபோடும் காட்சி இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 10, 2022, 03:58 PM IST
  • கண்ணாடியுடன் சண்டையிடும் பூனை.
  • இன்னொரு பூனை என நினைத்து சண்டை.
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ.
கண்ணாடியை பார்த்து சண்டையிடும் பூனை! வைரலாகும் வீடியோ! title=

இணையத்தில் தினம் தினம் பரவும் பல காட்சிகள் நகைச்சுவையையும், வியப்பையும் ஏற்படுத்துகிறது.  அதிலும் அதிகமாக பூனை பிரியர்களை கவரும் வகையில் பூனைகளின் பல பல குறும்பு வீடியோக்கள் இணையத்தில் பலரின் இதயங்களையும் ஈர்த்து வருகிறது.  பொதுவாக முகம் பார்க்கும் கண்ணாடியில் நாம் எதேச்சையாக நமது பிம்பங்களை பார்க்கும்பொழுது சில நொடி வேறு யாரோ ஒருவரின் பிம்பம் இருப்பதை போல தோன்றும்.  நமக்கே அப்படி இருந்தால் ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளுக்கு எப்படி தோன்றும், அந்த வகையில் தற்போது பூனை ஒன்று கண்ணாடியில் தெரியும் அதன் உருவத்தை வேறொரு பூனை என நினைத்து கண்ணாடியுடன் சண்டை போடும் காட்சி நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஒற்றைக் கையில் டேபிள் டென்னிஸ் விளையாடும் வீரர் - வைரல் வீடியோ

இந்த நகைச்சுவையான வீடியோ ட்விட்டரில், சிசிடிவி இடியட்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஒரு அறையில் முழு உருவத்தையும் காட்டும் வகையிலான பெரிய கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது, அதன் அருகில் ஒரு லைட்டும் வைக்கப்பட்டுள்ளது.  அந்த அறையில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிக்கு முன் கொழுகொழுவென்று ஒரு அழகிய பூனை நிற்பதை காணலாம், அந்த பூனையின் பிம்பமானது அதற்கு நேரெதிரேயுள்ள கண்ணாடியில் பிரதிபலிக்கிறது.  கண்ணாடியில் பிரதிபலிக்கும் தனது பிம்பத்தை பார்த்த அந்த பூனை, வேறொரு பூனை இருக்கிறது என நினைத்து கண்ணாடியுடன் சண்டை போடுகிறது.

 

இந்த காட்சி நகைச்சுவையை ஏற்படுத்துவதோடு, ரசிக்கும்படியாகவும் அமைந்துள்ளது.  இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  இந்த வீடியோவிற்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது, இணையவாசிகள் பலரும் பூனையின் இந்த செயல் குறித்து நகைச்சுவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | பதபதைக்க வைக்கும் முதலைகளின் சண்டை: கேமராவில் கைதாகி வைரலான வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News