விமான நிலையத்தில் நுழைந்த குரங்கு கூலாக வீடியோ எடுத்த பயணிகள் -Viral Video

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களை மகிழ்வித்ததோடு இல்லாமல், அவர்கள் வேடிக்கையான கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2021, 09:20 PM IST
விமான நிலையத்தில் நுழைந்த குரங்கு கூலாக வீடியோ எடுத்த பயணிகள் -Viral Video title=

வைரல் வீடியோ: புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விஐபி லவுஞ்சில் (VIP lounge) அட்டகாசம் செய்த குரங்கின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கிருந்த பழச்சாறு குடித்து விட்டு, பின்னர் அங்கு பார் கவுண்டரில் இருந்தவர் கொடுத்த உணவை சாப்பிடுகிறது.

அந்த வீடியோவில், குரங்கு விமான நிலையத்தின் விஐபி லவுஞ்சில் உள்ள பார் கவுண்டரில் பழச்சாற்றை குடிப்பது போல் தெரிகிறது. அங்கிருந்தவர்கள் இதை காணொளியாக படம் பிடித்துள்ளனர். 

பார் கவுண்டரில் பலர் இருக்கிறார்கள். ஆனால் குரங்கு இயல்பாக அங்கு வந்து சாப்பிட்டு செல்கிறது. பயணிகள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து தாவி குடித்து மேலேறி செல்கிறது. இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், சர்வதேச விமான நிலையத்தன் விஐபி லக்கேஜ் ஸ்டோர் வரை குரங்கு செல்கிறது என்றால், பாதுகாப்பு குறித்து ஒரு சந்தேகம் எழுகிறது.

வைரல் வீடியோவைப் பாருங்கள்:

 

ALSO READ |  Watch viral video: தீப்பிடித்து எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த சம்பவம் IGI விமான நிலையத்தில் நடந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. எனினும், சம்பவத்தின் தேதி மற்றும் நேரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களை மகிழ்வித்ததோடு இல்லாமல், அவர்கள் வேடிக்கையான கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர். 

ஒரு பயனர் கூறினார், "எங்களிடம் அதிக விஐபி விருந்தினர் உள்ளனர்!" மற்றொருவர், "சர்வதேச விமான நிலைய விஐபி லவுஞ்சில் உங்கள் விருந்தை அனுபவிக்கவும்" என்று பதிவிட்டுள்ளனர்.

இதேபோல மற்றொரு சம்பவம் ஜூன் மாதம் டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்தது. மெட்ரோ ரயிலில் ஒரு குரங்கு சவாரி செய்தது. ப்ளூ லைன் மெட்ரோ நிலைய வழித்தடத்தில் இந்த சம்பவம் நடந்தது. ஆனால் குரங்கு யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. விலங்குகளை துன்புறுத்தாத வரை, அதுவும் யாரையும் தாக்குவதில்லை.

ALSO READ |  Viral Video: வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆவேசமாக பேசிய முன்னாள் முதலமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News