Viral Video: பிபிஇ கிட் அணிந்து கர்பா நடனம், நவராத்திரி விழாவில் கோவிட் விழிப்புணர்வு

குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒரு நடன நிகழ்ச்சி நடந்துள்ளது. இங்கு பெண்கள் பிபிஇ கிட் அணிந்து கர்பா நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 14, 2021, 03:43 PM IST
Viral Video: பிபிஇ கிட் அணிந்து கர்பா நடனம், நவராத்திரி விழாவில் கோவிட் விழிப்புணர்வு title=

ராஜ்கோட்: கொரோனா பெருந்தொற்று நமது வாழ்க்கையை பற்றிக்கொண்டு, நம் வாழ்வின் பல முக்கிய அம்சங்களை முற்றிலுமாக மாற்றி விட்டது. சென்ற ஆண்டு நவராத்திரி பண்டிகைகளின் போது இருந்த அளவு தொற்றின் அளவு தற்போது அதிகமாக இல்லை என்றாலும், இன்னும் தொற்று முழுமையாக நம்மை விட்டு நீங்கிவிடவில்லை. ஆகையால், நாம் இன்னும் அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும், 

இதை வலியுறுத்தும் விதத்தில், குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒரு நடன நிகழ்ச்சி நடந்துள்ளது. இங்கு பெண்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE Kit) அணிந்து கர்பா நடனம் ஆடும் வீடியோ வைரலாகி (Viral Video) வருகிறது. 

இந்த நடனம் கோவிட் -19 இன் (Covid-19) அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. நவராத்திரி நிகழ்ச்சி ஒன்றில் பி.பி.இ கிட் அணிந்து சில பெண்கள் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை வீடியோவில் காண முடிகின்றது.

வீடியோவில் பெண்கள் தங்கள் பிபிஇ கிட்கள் மற்றும் முகக்கவசங்களை அணிந்துகொண்டு நாட்டுப்புற பாடலுக்கு கர்பா நடனம் ஆடுவதைக் காண முடிகின்றது. 

ALSO READ: 550 கேக்குகளை வெட்டிய தொழிலதிபர்- வைரல் வீடியோ

கர்பா என்பது நவராத்திரியின் போது, குறிப்பாக குஜராத்தில் ஆடப்படும் ஒரு இந்திய நாட்டுப்புற நடனமாகும்.

கோவிட் -19 இன் ஆபத்துகள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் முயற்சி இது என்று விழாவின் அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ஏஎன்ஐ-யிடம் பேசுகையில், கர்பா அமைப்பாளர் ரக்ஷபென் போரியா, "இந்த கர்பா நடனம் கோவிட் -19 பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றார்.

இந்த வீடியோ 21,000 க்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்று வைரலாகியுள்ளது. மக்கள் இந்த நடன நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள்.

ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் அம்மன் பண்டிகையான நவராத்திரி இந்தியாவின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். ஷரத் நவராத்திரி (Navratri) என்றும் அழைக்கப்படும் இந்த பண்டிகை, துர்கா தேவி மகிஷாசுரன் என்ற அரக்கனின் மீது கொண்ட வெற்றியைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது. 

இது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியையும் குறிக்கிறது. குஜராத் அரசு வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் கர்பா நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. எனினும் பலர் ஒரே இடத்தில் சேராமல் இருக்க சில வழிகாட்டுதல்களையும் அரசு அளித்துள்ளது.

ALSO READ: ரோட்டில் செல்பி எடுத்த பெண்ணுக்கு நடந்த சோகம் -வீடியோ பாருங்க

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News