’நண்பா ஹெல்ப் மீ’ சிப்ஸ் திருட குரங்குக்கு உதவும் நாய்: பலே கில்லாடிங்கப்பா..! வைரல் வீடியோ

நாய் மற்றும் குரங்கு இரண்டும் சேர்ந்து சிப்ஸ் திருடும் வீடியோ காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. அதுவும் நாய் மீது குரங்கு ஏறி அமர்ந்து இந்த வேலையை செய்வது செம ஹைலைட்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 9, 2023, 12:02 PM IST
  • சிப்ஸ் திருடும் பலே கில்லாடிகள்
  • குரங்கு - நாய் கூட்டு களவானிகள்
  • வீடியோவில் சிக்கிய விநோதம்
’நண்பா ஹெல்ப் மீ’ சிப்ஸ் திருட குரங்குக்கு உதவும் நாய்: பலே கில்லாடிங்கப்பா..! வைரல் வீடியோ title=

இன்ஸ்டாகிராம்,  யூடியூப் அதிகம் பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால் நிச்சயம் நாய் - குரங்கு வீடியோக்களை அதிகம் பார்த்திருப்பீர்கள். ரீல்ஸ்களில் குரங்கு மற்றும் நாய் வீடியோக்கள் தான் அதிகம் டாப் டிரெண்டிங்கில் செல்லும் வீடியோகளாக இருக்கின்றன. இப்போது டிவிட்டரையும் இந்த டிரெண்ட் ஆக்கிரமித்திருக்கும் நிலையில், குரங்கு ஒன்று சிப்ஸ் திருடுவதற்கு நாய் உதவும் வீடியோ வைரலாகியுள்ளது. டரானா ஹுசைன் என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அழகான அந்த வீடியோவில் நாய் ஒன்று மீது குரங்கு அமர்ந்திருக்கிறது. என்ன விநோதமாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம்.

மேலும் படிக்க | ரயிலில் இளம் பெண்களின் ஆடியோ குளுகுளு நடனம்: வைரல் வீடியோ

இதற்கே இப்படி நினைத்தால் எப்படி?. அவை இரண்டும்  சிப்ஸ் திருடுவதற்கு சேர்ந்து செம ஸ்கெட்ச் போட்டிருப்பதை அறிந்தால் வியப்பின் உச்சத்துக்கே செல்வீர்கள். ஆம், நாயும், குரங்கும் ஒரு கடையில் சிப்ஸ் திருடுவதற்காக பிளான் போட்டு கூட்டு சேர்ந்திருக்கின்றன. நாய் மீது குரங்கு ஏறி அமர்ந்து கொள்கிறது. உடனே அந்த நாய் கடையில் தொங்கவிடப்பட்டிருக்கும் சிப்ஸூக்கு அருகே சென்று நின்று கொள்ள, குரங்கு கை மற்றும் வாயை பயன்படுத்தி அதனை திருட முயற்சிக்கிறது. இது வழக்கமாக நடைபெற்று இருந்திருக்கிறது.

ஒருநாள் கடை உரிமையாளர் மற்றும் அங்கிருப்பவர்கள் பார்த்து வியக்க, பின்னர் அவர்களின் திருட்டை வீடியோவாகவும் பதிவு செய்துவிட்டனர். இந்த வீடியோ வருவதற்கு முன்பு யாரிடமாவது சென்று, குரங்கும், நாயும் சென்று ஜோடி போட்டு திருடுகின்றன. நாய் மீது குரங்கு அமர்ந்து கொள்கிறது. நாய் மெதுவாக நடந்து சென்று சிப்ஸ் அருகில் நிற்க குரங்கு அதனை திருடுகிறது என்றெல்லாம் சொல்லியிருந்தால், யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். ஆனால், இப்போது வீடியோ இருக்க அனைவரும் அதனை பார்த்து வாயடைத்துபோய் உள்ளனர். 

இந்த வீடியோவை முதலில் கடந்த ஆண்டு டிசம்பரில் Memes.bks இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது. அதில், குரங்கும் நாயும் நல்ல நண்பர்கள் இல்லை என்று யார் சொன்னார்கள். ரெண்டு பேரும் ஜிகிரி தோஸ்து. எப்படி ஜாலியாக பிளான் போட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் பாருங்கள் என்ற கேப்சனுடன் பதிவிட, இணையத்தில் இந்த வீடியோ வைரல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. டிவிட்டரில் 5 ஆயிரம் பார்வைகளை பெற்றிருக்கும் இந்த வீடியோ யூ டியூப்பில் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. 

மேலும் படிக்க | ’வாத்தியாரு எங்க போய்ட்டாரு’ கோபமாக இந்தி கற்றுக் கொடுக்கும் சிறுவனின் மைண்ட்வாய்ஸ் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News