ஐக்கிய நாடுகளின் மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்த இரட்டையர்களுக்கு ஒரே நாளில் குழந்தை பிறந்து ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது!
பொதுவாக இரட்டையர்கள் ஒரே தேதியில் பிறந்து பார்த்திருப்போம், ஆனால் இங்கு அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் ஒரே பிறப்பு தேதியினை கொண்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்த இரட்டையர்கள் ஜோஸ்வா மற்றம் ஜஸ்டீன்.
இதில் மூத்தவரான ஜோஸ்வா மற்றும் அவரது மனைவி டேனிஸ் தம்பதியருக்கு, கடந்த மார்ச் 27 ஆம் நாள் காலை 4.18 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையினை பார்க்க வந்த அவரது சகோதரர் ஜஸ்டீன் தனது மனைவி அலெக்ஸ்-னையும் அழைத்து வந்தார். காரணம் அவருக்கும் அன்றைய தினமே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்க, ஜஸ்டீன்-அலெக்ஸ் தம்பதியருக்கு அன்றைய தினமே அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இச்சம்பவத்தால் இரட்டையர் குழந்தைகளும் ஒரே பிறப்பு தேதியினை பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அவர்களது பெற்றோர்கள் தெரிவிக்கையில்... தங்கள் மருமகள்கள் கருதரித்த போதே இவ்வாறு நடக்கலாம் என்று யூகித்தோம் ஆனால் அவ்வாறு நடப்பது சாத்தியமில்லை என்றே என்னினோம். இறுதியில் விதி வென்று விட்டது. நாங்கள் நினைத்தபடியே நடந்துவிட்டது என தெரிவித்தனர்.