யானைக்கு மதம் பிடித்தால் காண்டாமிருகம் என்ன செய்யும்: பதைபதைக்க செய்யும் வைரல் வீடியோ

காண்டாமிருகம் மற்றும் யானைக்கு இடையில் நடைபெற்ற மூர்க்கமான சண்டையை பார்க்கும்போதே பதைபதைக்கிறது. அடுத்து என்ன நடந்தது என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது - வீடியோவைப் பாருங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 11, 2022, 03:55 PM IST
  • காண்டாமிருகம் மற்றும் யானைக்கு இடையில் மூர்க்கமான சண்டை
  • புழுதி பறக்கும் யானைச் சண்டை
  • யானைக்கு மதம் பிடித்தால் காண்டாமிருகம் என்ன செய்யும்?
யானைக்கு மதம் பிடித்தால் காண்டாமிருகம் என்ன செய்யும்: பதைபதைக்க செய்யும் வைரல் வீடியோ title=

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் மக்களால் மிகவும் விரும்பப்படுகின்றன, இதுபோன்ற வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையில் பகிரப்படுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

வைரலாகும் வீடியோக்களில், சிங்கங்கள், சிறுத்தைகள் என பல்வேறு விலங்குகளின் வீடியோக்கள் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் விலங்குகளை வேட்டையாடும் வீடியோ வைரலானால், பல சமயங்களில் இரு விலங்குகளின் மல்யுத்தம் மலைக்க வைக்கிறது.

சில நேரங்களில் இரண்டு விலங்குகள் ஒருவருக்கொருவர் அன்பைப் பொழிவது வைரலானால், சில சமயங்களில் காதலுக்காக வீரப் போட்டி நடத்துவதையும் பரவலாக பார்த்து ரசிக்கிறோம். தற்போது, யானை மற்றும் காண்டாமிருகம் போட்டுக் கொள்ளும் மூர்க்கத்தனமான சண்டை வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகியுள்ளது.

காட்டில் இருவருக்கும் இடையே எப்படி சண்டை சூழல் உருவாகிறது என்பதை வீடியோவில் பார்க்கலாம்.

இரண்டு மிருகங்களும் சிலிர்த்துக் கொண்டு எதிரெதிரே நிமிர்ந்து நிற்கின்றன. காட்டில் படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோ தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது.  

மேலும் படிக்க | வம்பிழுத்தவரை வகுந்தெடுத்த நாய் - வைரல் வீடியோ

யானை மற்றும் காண்டாமிருகம் சண்டை
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் யானையும் காண்டாமிருகமும் நேருக்கு நேர் நிற்பதை காண முடிகிறது. பின்னர் விரைவில் அவர்கள் ஒருவரையொருவர் உற்றுப் பார்க்கத் தொடங்குகின்றன.

காண்டாமிருகம் புழுதி பறக்க, யானையைத் தாக்க முயல்கிறது (Elephant Video). நின்றுக் கொண்டிருக்கும் யானை, மிகுந்த அவசரத்துடன் நின்று காண்டாமிருகத்தின் தாக்குதலைத் தவிர்க்க முயல்கிறது. இந்த ஆட்டம் இருவருக்குள்ளும் சற்று நேரம் நீடிக்கிறது. இந்த காணொளியை பார்த்து சமூக வலைதளவாசிகள் வைரலாக்கி வருகின்றனர். 

யானையை பின்னுக்கு தள்ளிய காண்டாமிருகம்

யானையுடன் ஒப்பிடும்போது, காண்டாமிருகம் உருவத்தில் சிறியதாக இருக்கிறது. யானை மிகவும் சக்தி வாய்ந்த விலங்கு என்றாலும், இந்த வீடியோவில், காண்டாமிருகத்தை கண்டு கொஞ்சம் பயந்து போவதாக தெரிகிறது.

இல்லை, போனாப் போகுது பொளைச்சுப் போ என்று சொல்லி, எதிர்தாக்குதல் நடத்தாமல் அமைதி காக்கிறதோ யானை? ஆனால், காண்டாமிருகம் திடீரென்று தாக்கினாலும், நிலையாக தாக்குகிறது.

இந்த தாக்குதலை எதிர்பார்க்காத யானை. பின்னே ஓடி தன்னை காத்துக் கொள்கிறது. காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ theglobalanimalsworld என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு இதுவரை நூற்றுக்கணக்கான லைக்குகள் மற்றும் பார்வைகள் கிடைத்துள்ளன. ஆனால், இது இரண்டு விலங்குகளுக்கும் இடையிலான விளையாட்டு வீடியோவாகவும் இருக்கலாம் என்றும் சில சமூக ஊடக பயனர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News