கடற்கரையில் குழந்தை போல் மணல் வீடு கட்டி விளையாடும் நாய்களின் வீடியோ வைரல்!

இரண்டு நாய்கள் விடுமுறை நாளில் கடற்கரைக்கு சென்று அந்த கடற்கரை மணலில் ஒரு சிறிய மணற்கோட்டை கட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 9, 2022, 06:47 AM IST
  • கடற்கரையில் ஜாலியாக விளையாடும் நாய்கள்.
  • விடுமுறையை கொண்டாட கடற்கரையில் ஆட்டம்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
கடற்கரையில் குழந்தை போல் மணல் வீடு கட்டி விளையாடும் நாய்களின் வீடியோ வைரல்! title=

பொதுவாக விடுமுறை நாட்களில் கடற்கரை சென்று அங்கு நேரத்தை மகிழ்ச்சியான முறையில் செலவிடுவது பெரும்பாலானவருக்கு பிடித்தமான ஒன்றாகும்.  அங்கு சென்று கடல்நீரில் விளையாடுவது, மணலில் சிற்பங்கள், வீடுகள் போன்ற அமைப்புகளை செய்வது, கடற்கரை காற்றில் நடப்பது போன்று பல செயல்களை செய்வோம்.  மனிதர்கள் மட்டும் தான் இப்படியெல்லாம் செய்வார்களா, நாம் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளும் இதுபோன்று செய்வார்கள் என்பதை காட்டும் விதமாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  இரண்டு நாய்கள் மனிதர்களை போல கடற்கரை மணலில் மணற்கோட்டை கட்டி மகிழ்ச்சியாக விளையாடுகிறது.

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் 'குட் பாய் ஒல்லி' என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.  அந்த வீடியோவில், நாயின் உரிமையாளர் ஒரு பெட்டியில் துண்டு சீட்டுகளை போட்டு, இந்த வார விடுமுறையில் என்ன செய்யலாம் என்று அதில் ஒரு சீட்டை தேர்ந்தெடுக்குமாறு நாயிடம் நீட்டுகிறார்.  அந்த நாய் ஒரு சீட்டை எடுக்க அதில் மணலில் கோட்டை கட்டலாம் என்கிற வசனம் எழுதப்பட்டு இருக்கிறது, உடனே நாய் உற்சாகமாக அவர்களுடன் கிளம்பி கடற்கரைக்கு செல்கிறது.  அங்கு சென்றதும் மணற்கோட்டை கட்ட உதவி அதன் நண்பன் நாய் ஒன்றும் இணைந்துகொள்கிறது.  இருவரும் ஓடிப்போய் ஒரு சிறிய வாளியை எடுத்துக்கொண்டு வருகின்றனர், அந்த நாயை மணலை தோண்டி அந்த வாளியினுள் மணலை நிரப்புகிறது.  பின்னர் அந்த வாளியை கவிழ்த்து அதிலுள்ள மணலை கீழே சாய்கின்றனர், அது சிறிய வாளியின் ஷேப்பிற்கு அழகாக சிறிய கோட்டை போன்று இருக்கிறது.

 

பின்னர் அந்த நாய்கள் அந்த கோட்டையை அலங்கரிக்க ஓடிச்சென்று சில சிப்பிகளை எடுத்து வந்து அந்த கோட்டையின் மீது வைக்கின்றனர், அது பார்ப்பதற்கு நாய்களின் உள்ளங்கால் போன்று இருக்கிறது.  வெற்றிகரமாக இந்த டாஸ்க்கை நாய் முடித்ததும், இன்னொரு நாய் ஓடிவந்து அந்த மணற்கோட்டை மீது விழுந்து அதனை இடித்து மகிழ்கிறது.  இணையத்தில் பரவிய இந்த வீடியோ 1.3 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது மற்றும் இந்த காட்சியை பலரும் ரசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சீண்டியவரின் அந்தரங்க உறுப்பை பதம் பார்த்த பாம்பு வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News