இந்த பாடு படுத்திறீங்களே! டேய் நான் பாம்புடா? கொஞ்சமாவது மதிங்க! கெஞ்சல் வீடியோ வைரல்

Wild Animal Fight Video: இப்படி போட்டு படுத்தினா, பாவம் பாம்பு என்ன செய்யும்? பாலைக் குடித்தாலும் பச்சைப் பிள்ளையாக இருக்கும் அபலைப் பாம்பு வீடியோ வைரல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 6, 2023, 12:02 AM IST
  • பாம்புக்கே பல்பு கொடுத்த காக்கைக் கூட்டம்
  • இப்படி போட்டு படுத்தினா, பாவம் பாம்பு என்ன செய்யும்?
  • பச்சைப் பிள்ளையாக இருக்கும் அபலைப் பாம்பு வீடியோ வைரல்
இந்த பாடு படுத்திறீங்களே! டேய் நான் பாம்புடா? கொஞ்சமாவது மதிங்க! கெஞ்சல் வீடியோ வைரல் title=

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. சமூக ஊடக உலகில் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்தால் நமக்கு பொழுதுபோவதே தெரியாது. நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் சமூக ஊடகங்களில் பார்க்கிறோம். இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சிலர் சில சமயம் தங்கள் சாகசத்தை காட்ட செய்யும் வீராப்பு செயல்கள் அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. அப்படிப்பட்ட சம்பவங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவை பலவிதமான உணர்ச்சிகளை நமக்கு உண்டாக்குகின்றன.சிவனே என தனது வழியில் சென்றுக் கொண்டிருந்த ஒரு பாம்புக்கு என்ன நேர்ந்தது என்று சொல்லும் வீடியோ இது.

தனது வழியில் சென்று கொண்டிருந்த போது, பறவைகள் கூட்டம் அனைத்து பக்கங்களிலும் சுற்றி வளைத்து தாக்க ஆரம்பித்தால், பாவம் பாம்பு என்ன செய்யும்?

 பாம்பு-கீரி சண்டை வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இரண்டுக்கும் இடையிலான சண்டையில், கீரி வெற்றி பெறுவது சகஜம் ஆகும். ஆபத்தான பாம்பையும் தோற்கடிக்கும் கீரியை பார்த்திருக்கலாம். ஆனால் எப்போதாவது பறவைகளில் தாக்குதலுக்கு இடையில் அகப்பட்டு, இரையாகும் பாம்பு பல்பு வாங்கும் வீடியோவை நீங்கள் பார்த்ததுண்டா?

இதுபோன்ற அதிர்ச்சி வீடியோ ஒன்று எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. இதில், பறவைகள் பாம்பை சுற்றி வளைத்து, கொத்தில் அதை காயப்படுத்திவிடும் வீடியோ வைரலாகி வருகிறது.  

மேலும் படிக்க | கீரிக்கும் பாம்புக்கும் பயங்கர சண்டை: நம்ப முடியாத முடிவு, வைரல் வீடியோ

பறவைகளால் சூழப்பட்ட பாம்பு
சில வினாடிகளில் வெளியான வீடியோவில், ஐந்தாறு பறவைகள் சுற்றி வளைத்தபோது, ​​நாகப்பாம்பு சௌகரியமாகச் சென்று கொண்டிருந்ததைக் காணலாம். இப்போது பாம்பு எங்கு சென்றாலும் பறவை உடனே பறந்து சென்று அதன் முன் நின்று அதை பாடாய் படுத்துகின்றன.

ஒரு பறவையைத் தாக்க பாம்பு முன்னோக்கி நகர்ந்தவுடன், அந்த பறவை, பின்வாங்குகிறது. இஉண்மையில், பாம்பு பறவையின் பின்னால் ஓடினால், உடனடியாக மற்ற பறவை அதன் கொக்கால் தாக்கத் தொடங்குகிறது.

சுமார் 60 வினாடிகளில், பறவைகளின் கூட்டம் பாம்பை பல முறை தாக்குகிறது, அந்த பரிதாபமான பாம்பு, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடினாலும், விடுவதற்கு பறவைகள் தயாராக இல்லை என்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

பறவைகளின் இத்தகைய மோசமான தாக்குதலுக்குப் பிறகு, அந்த பாம்பினால்  நகர முடியவில்லை. இறுதியாக, எப்படியோ பாடுபட்டு நகர்ந்த பாம்பு தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டது. பறவைகள் பாம்பை தாக்கும் இந்த வீடியோ, லேட்டஸ்ட் சைட்டிங்ஸ் என்ற சேனலில் இருந்து YouTube இல் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 29 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை சேகரித்துள்ளது.

மேலும் படிக்க | காட்டில் கேக் வெட்டிய நபர், அபேஸ் செய்த குரங்கு: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News