Viral Video: ஆண்மகன்கள் இப்படி இருக்கணும்! மாதவிடாய் காலத்தில் தாய்க்கு சேவை செய்யும் மகன்

Son Buy Pads His Mother: மாதவிடாய் காலத்தில் தனது தாயை "ராணியைப் போல" மகன் மற்றும் தந்தை எப்படி பார்த்துக் கொள்கிறார்கள் என்பதைக் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 4, 2023, 07:43 PM IST
  • சில நேரங்களில் வெளியாகும் வீடியோக்கள் அனைவரையும் நெகிழச் செய்கிறது.
  • பெற்றோருக்கு சேவை செய்வது குழந்தைகளின் கடமையாகும்.
  • மாதவிடாய் என்பது கர்ப்பத்தைப் போலவே ஒரு இயற்கையான விஷயம்.
Viral Video: ஆண்மகன்கள் இப்படி இருக்கணும்! மாதவிடாய் காலத்தில் தாய்க்கு சேவை செய்யும் மகன்  title=

Son Take Care His Mother During Menstruation: சமூக வலைதளங்களில் பல வகையான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. சில நேரங்களில் வெளியாகும் வீடியோக்கள் அனைவரையும் நெகிழச் செய்கிறது. இந்த உலகில் பெற்றோரை விட பெரியது எதுவுமில்லை என்று கூறப்படுகிறது. பிள்ளைகளை பெற்றெடுத்ததில் இருந்து அவர்களை வளர்க்கும் வரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக எதையும் செய்வதில் தயங்குவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், பெற்றோருக்கு சேவை செய்வது குழந்தைகளின் கடமையாகும். இதை இப்போதெல்லாம் பார்ப்பது மிகவும் அரிதாகி வருகிறது. சமீபத்தில் இதுபோன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஒரு ஆண்மகன் தனது தாயின் மாதவிடாய் காலத்தில் எப்படி கவனித்துக்கொள்கிறார் என்பதைக் குறித்து பகிரப்பட்டு உள்ளது.

மாதவிடாய் காலத்தில் அம்மாவுக்கு சேவை செய்யும் மகன்:

இன்ஸ்டாகிராம் பயனர் அனிஷ் பகத் ஒரு ரீல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், அவரது சகோதரர் மற்றும் அவரது தந்தை தனது தாயை மாதவிடாய் காலத்தில் "ராணியைப் போல" எப்படி பார்த்துக்கொள்கிறார்கள் என்பதைப் பகிர்ந்துள்ளார். மேலும் பதின்மூன்றாவது வயது இருக்கும் போது எனக்கும் அண்ணனுக்கும் பெண்களுக்கு ஏற்படும் பீரியட்ஸ் பற்றி அப்பா சொன்னார் என்று அந்த நபர் வீடியோவில் கூறியுள்ளார். எங்கள் அப்பா விரும்பியதெல்லாம் அம்மாவை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனவும் கூறுகிறார்.

மேலும் படிக்க: மழையில் மல்லாக்க படுத்தா எவ்ளோ சுகம்..! குழந்தையின் அழகு வீடியோ வைரல்

இருவரும் சேர்ந்து பகத் மென் (Bhagat Men) என்ற வாட்ஸ்அப் குழுவையும் உருவாக்கியுள்ளனர். அதன்மூலம் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத போதும், நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் அல்லது அம்மாவுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அவரை கவனித்துக் கொள்வதுதான் இந்த வாட்ஸ்அப் குழுவின் முக்கியமான வேலையாகும். 

அம்மாவுக்காக பேட் வாங்கும் ஆண்மகன்கள்:

கடந்த ஆறு ஆண்டுகளில், எனது அம்மா தனக்காக பேட்களை வாங்க வெளியே சென்றதில்லை. அதைச் செய்வது நாங்கள் தான் எனவும் அனிஷ் கூறியுள்ளார்.

அவரது மகன் தனது தாய்க்கு புதிய சானிட்டரி பேட்களை (Sanitary Pads) வாங்குவதை வீடியோவில் காணலாம். பேட்களுடன் சேர்ந்து தனது தாய்க்கு மகன் சாக்லேட் வாங்குவது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீடியோவின் கடைசியில் அம்மாவுக்காக மகன் தேநீர் போட்டு தருகிறார். இந்த வீடியோவை மக்கள் மிகவும் விரும்பி வருகின்றனர். இதுபோன்று தான் ஆண்மகன்கள் இருக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க: டெல்லி மெட்ரோ வைரல் வீடியோ: இருக்கைக்காக சண்டையிட்ட இருபெண்கள்!

அந்த வீடியோவை பாருங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anish Bhagat (@anishbhagatt)

இந்த காணொளியை பார்த்த பலர் அந்த பையனின் தந்தையை பாராட்டி வருகின்றனர். உண்மையாகவே குழந்தையை எப்படி வளர்ப்பு என்பது தங்களுக்கு நன்றாக தெரிந்திருகிறது என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்த அற்புதமான வீடியோவை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விரும்பியுள்ளனர்.

மாதவிடாய் இயற்கையான விஷயம்:

வீடியோவை பார்த்த  ஒருவர் கூறுகிறார், "அற்புதமானது! இது ஒரு சிறந்த வளர்ப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மாதவிடாய் என்பது கர்ப்பத்தைப் போலவே விவாதிக்கப்பட்டு இயல்பாக்கப்பட வேண்டிய ஒரு இயற்கையான விஷயம். சில தோழர்கள் அதைத் தாண்டிச் செல்ல முன்முயற்சி எடுப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்! இது ஒரு நல்ல தொடக்கம்." எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: அட கடவுளே..பள்ளி ஆசிரியை செய்ய வேண்டிய செயலா இது..கடுப்பேத்தும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News