டீ, காபி போன்ற பானங்களுடன் காலையில் பலரும் பிஸ்கட், ரஸ்க் போன்ற சிற்றுண்டிகளை எடுத்து கொள்கின்றனர். இது உடலுக்கு நல்லதா? இல்லை என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பிஸ்கட் மற்றும் ரஸ்க் போன்ற தின்பண்டங்களை டீ மற்றும் காபி உடன் சேர்த்து குடிப்பது நீரிழிவு போன்ற மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். கூடுதலாக, உடல் பருமனுக்கு பங்களிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
டீ மற்றும் காபியுடன் பிஸ்கட், ரஸ்க், பஜ்ஜி, சமோசா போன்றவற்றை எடுத்து கொள்ள கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உணவுகள் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
மேலும் இது கடுமையான இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எண்ணெயில் சமைத்த உணவுகளை டீ மற்றும் காபியுடன் சேர்த்து சாப்பிடும்போது, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளும் அதிகமாகும்.
இந்த ஆரோக்கியமற்ற கலவையானது மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பிஸ்கட் மற்றும் ரஸ்க் சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவற்றை டீ அல்லது காபியுடன் சேர்த்து சாப்பிடும் போது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
டீ மற்றும் காபியுடன் ரஸ்க், பிஸ்கட்டிற்கு பதிலாக பழங்களை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இருப்பினும், சிட்ரஸ் பழங்களை தவிர்ப்பது நல்லது.