Health Benefits Of Soaked Figs: அத்திப்பழம் ஊட்டச்சத்து நிறைந்த ஒன்றாகும். இதனை வெறுமையாக உண்டாலே உடலுக்கு ஆரோக்கியமானது என கூறுவார்கள். இருப்பினும் அதனை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் செரிமானத்திற்கு நல்லது என்றும், ஊட்டச்சத்துக்களை உடல் எளிமையாக உறிஞ்சும் ஆகியவை என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அத்திப்பழம் உதவுகிறது. குறிப்பாக உங்களின் சரியான தூக்கத்திற்கும் செரிமான பிரச்சனைகளுக்கும் கூட இந்த ஊற வைத்த அத்திப்பழம் தீர்வை கொடுப்பதாக கூறப்படுகிறது. அத்திப்பழத்தில் ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்து இருக்கின்றன.
எனவே இதனை ஊற வைத்து நீங்கள் சாப்பிடுவதால் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் அதிக நன்மையை தரும் எனலாம். ரத்த சர்க்கரை அளவை சீராக்குவதற்கு, சருமம் ஆரோக்கியம் நீடிப்பதற்கு, நன்றாக தூங்குவதற்கு, செரிமானம் சீராவதற்கு நீங்கள் ஊறவைத்த அத்திப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் தினமும் நீங்கள் தூங்குவதற்கு முன்பு ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கே விரிவாக காணலாம்.
மேலும் படிக்க | மூன்றே நாளில் வழுக்கையை ஏற்படுத்தும் மர்ம வைரஸ்... அதிர்ச்சியில் கிராம மக்கள்
ஊறவைத்த அத்திப்பழம்: ரத்த சர்க்கரை அளவு சீராகும்
ஊறவைத்த அத்திப்பழத்தை உண்பதன் மூலம் உங்கள் குளுக்கோஸ் அளவு சீராக இருக்கும். எனவே இதனை நீரிழிவு நோய் இருப்பவர்களும் உண்ணலாம். மேலும் ஆற்றலை அதிகரிக்கவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
ஊறவைத்த அத்திப்பழம்: உடல் எடையை குறைக்க...
இரவில் இந்த ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவது பெரும் பலனை அளிக்கும். குறிப்பாக உங்களின் இனிப்பு சார்ந்த பசியை இது தணிக்கும். எனவே, இரவில் ஆரோக்கியமற்ற இனிப்புகளை சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான அத்திப்பழத்தை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம். மேலும் சமச்சீரான ஊட்டச்சத்து உங்களுக்கு கிடைக்கும்.
ஊறவைத்த அத்திப்பழம்: குடல் ஆரோக்கியத்திற்கு...
இதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கிறது என்பதால் ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு உதவும். மேலும் இது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவும். இதனை ஊற வைத்து சாப்பிடுவதனால் வயிற்றில் உள்ள செரிமான நொதிகளை தூண்டி, எளிமையாக ஊட்டச்சத்து உங்கள் உடலில் சேர வழிவகை செய்யும்.
ஊறவைத்த அத்திப்பழம்: தூக்கத்தை சீராக்கும்
நீங்கள் இரவில் தூங்காமல் கண் விழித்திருக்கிறீர்கள் என்றால் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடலாம். தினமும் இரவில் தூங்கும் முன் அத்திப்பழத்தை சாப்பிடுவது உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும். மேலும் இது உங்களின் தூக்கத்தை சீராக வைக்கவும் உதவும்.
ஊறவைத்த அத்திப்பழம்: சரும ஆரோக்கியம்
சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து பண்புகளையும் இது கொண்டுள்ளது. நீர்ச்சத்து இருப்பதால் சருமம் பளபளப்பாக தோற்றமளிக்கும். மேலும் ஊறவைத்த அத்திப்பழம் உங்களின் சருமத்திற்கு பளபளப்பையும் ஜொலிப்பையும் தரும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | இனி நோ டென்ஷன்..பெண்களின் பட் கொழுப்பைக் குறைக்கும் அற்புதமான கசாயம் ரெடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ