Ajith Kumar 3rd Place In Dubai Car Race : நடிகர் அஜித்குமார், துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்து கொண்டார். இதையடுத்து அவரது குழு, மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறது.
Ajith Kumar 3rd Place In Dubai Car Race : கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார், கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை தாண்டி தனக்கு பிடித்திருக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அவர் சமீபத்தில் துபாயில் நடந்த 24ஹெச் கார் ரேஸில் கலந்து கொண்டார். ஆனால், தொடர்ந்து விபத்து ஏற்பட்டு கொண்டே இருந்ததால் அதிலிருந்து விலகினார். இதையடுத்து, வேறு ஒரு பிரிவில் அவரது குழு கலந்து கொண்டது. அதில் இவர்களுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. இவர்கள் வெற்றிக்களிப்பில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமாருக்கு சினிமா மீது ஒரு பக்கம் காதல் இருந்தாலும் அதைத்தாண்டி அவருக்கு பிடித்த விஷயங்கள் என்பது நிறைய இருக்கின்றன. அதில் ஒன்று, கார் ரேஸில் பங்கேற்பது.
சில மாதங்களுக்கு முன்பு, விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களின் ஷூட்டிங்கை முடித்த இவர், பின்பு துபாய் கார் ரேஸிற்கான பயிற்சியில் இறங்கினார். இதற்காக உடல் எடையை குறைக்கவும் செய்தார்.
துபாய் கார் ரேஸிற்காக பயிற்சி மேற்கொண்ட போது அஜித்தின் கார் பிரேக் கோளாறு காரணமாக பல முறை விபத்திற்குள்ளானது. இதனால், அந்த போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
அஜித்தின் குழு, 992 பிரிவில் கார் ரேஸில் கலந்து கொண்டது. இந்த போட்டி இன்று நடைப்பெற்ற நிலையில் அவர்களுக்கு 3வது இடம் கிடைத்திருக்கிறது.
அஜித், இந்த போட்டியில் கலந்து கொள்வதால், தமிழ் மக்கள் மட்டுமன்றி உலகளவில் பலர் இந்த நிகழ்ச்சியை ஆன்லைனில் பார்த்ததாக கூறப்படுகிறது.
அஜித், இந்திய கொடியுடன் மகிழ்ச்சி ததும்ப போஸ் கொடுக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களும் வெகு விரைவில் வெளியாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.