வாழ்க்கைக்கான பாடங்கள் எப்போது எப்படி கிடைக்கும் என்று யாராலும் சொல்லிவிட முடியாது. அனுபவ ரீதியாக, சில விஷயங்கள் நமக்கு உணர்த்தி விட்டுச் செல்லும் பாடம் வாழ்நாளில் எவ்வளவு முயன்றாலும் கிடைக்காது.
அதிலும் இன்று சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள் பல, அச்சத்தை ஏற்படுத்தினாலும் நமக்கு சில சமயங்களில் அதிர்ச்சியைத் தருகிறது. அதிர்ச்சியாக இருந்தாலும் அவை தரும் பாடங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மிருகங்களை, மிருகக்காட்சி சாலையில் பார்க்கச் செல்லும்போது, அங்கு அறிவுறுத்தப்படும் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும். இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதை உணர்த்தும் ஒரு வீடியோ இது.
மேலும் படிக்க | Viral Video: பாம்பை கொத்திக் குதறும் பறவைகள்; மனம் பதற வைக்கும் வீடியோ
எல்லா விஷயங்களும் நமக்கே நடக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பிறருக்கு ஏற்படும்போது பார்த்து கற்றுக்கொள்வது புத்திசாலிகள் செய்யும் வேலை
அண்மைய்ல் வைரலாகும் ஒரு வீடியோவில் பொழுதுபோக்குவதற்காக மிருகக்காட்சி சாலைக்கு செல்லும் நபர்களில் ஒருவரை மனிதக் குரங்கு ஒன்று கூண்டுக்குள் இருந்து பிடித்து இழுக்கிறது அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.
பொதுவாகவே, மிருகக்காட்சி சாலைகளில், விலங்குகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கும், மனிதர்கள் நின்று அவற்றை பார்க்கும் பகுதிக்கும் கணிசமான இடைவெளி இருக்கும். ஆனால், அப்படியிருக்கும்போது மனிதக் குரங்கு, கை நீட்டி பிடிக்கும் அளவு அருகில் சென்றது மனிதர்களின் தவறாகத் தானே இருக்க முடியும்?
மேலும் படிக்க | பிரிந்த குழந்தையுடன் சேரும் ஸ்லாத் அம்மா: கண் கலங்க வைக்கும் க்யூட் பாசமலர்கள்
இதுபோன்ற தவறுகளை செய்ய வேண்டாம் என்பதை உணர்த்தும் மனிதக் குரங்கு - மனிதர்கள் வீடியோ...
தவறு செய்தாலும், மனிதக் குரங்கின் பிடியில் சிக்கிக் கொண்டவருக்கு உயிராபத்து எதுவும் இல்லை என்று தெரிகிறது. ஆனால், இழுக்கப்பட்டவருக்கும், அவருடன் இருப்பவருக்கும் ஏற்பட்ட அதிர்ச்சி அவர்களுக்கு மிகப்பெரிய பாடமாக இருந்திருக்கும்.
இதுபோன்ற தவறுகள் விலங்குகளின் மன அமைதியையும் குறைக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வீடியோவில், பார்வையாளர் ஒருவரை முரட்டுத்தனமாக பிடித்து இழுக்கும் மனிதக் குரங்கின் ஆக்ரோஷம் நன்றாக வெளிப்படுகிறது.
மேலும் படிக்க | ஓவரா போற, ஒழுங்கா இரு: சீண்டிய நபரின் சட்டையை பிடித்து திட்டிய ஒராங்குட்டான்
சுற்றிப் பார்க்க வந்தவரை, தனது பலத்தால் இழுத்து சுற்றி வளைக்கும் விலங்கு ஆபத்தானதாக தெரிகிறது. அவரது காலைப் பிடித்து அருகில் இழுத்து வாயால் கடிக்க முற்படுவதைப் பார்க்கும்போது அச்சமாக இருக்கிறது. அநத தாக்குதலை எதிர்கொண்டவரின் நிலையோ பரிதாபமாக இருக்கிறது. அவரை பாதுகாக்க முயலும் நண்பரின் முயற்சிகளும் பதற்றப்பட வைக்கிறது.
அடக்கி வைக்கப்பட்டிருக்கும் சீற்றத்தை, வலுவான விலங்குகள் வெளிப்படுத்தினால் அதை மனிதர்களால் தாங்க முடியுமா? விளையாட்டு விபரீதமாகும் என்பதை புரிந்துக் கொண்டு, விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வீடியோ இது.
குரங்குப்பிடி என்றால் என்ன, அது எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதை இந்த சுற்றுலாப் பயணி நன்றாக புரிந்துக் கொண்டிருப்பார். உண்மையில் , கூண்டிற்குள் இல்லாமல் இருந்திருந்தால், அந்த மனிதரின் நிலை என்னவாகியிருக்கும் என்று நினைத்தாலே அச்சமாய் இருக்கிறது.
மேலும் படிக்க | பதுங்குக்குழியில் பதுங்கினாலும் பாய்ந்து வேட்டையாடும் சிறுத்தையின் பாதள வேட்டை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR