Viral Video: நான் அப்பாவுக்கு மேக்கப் செய்கிறேன்! வைரலாகும் குழந்தை வீடியோ

Instagram Makeup Video: அப்பாவுக்கு மேக்கப் செய்யும் குட்டிக் குழந்தையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 25, 2022, 01:07 PM IST
  • அப்பாவுக்கு மேக்கப் போடும் குட்டிக் குழந்தை! வீடியோ வைரல்
  • மேக்கப் செய்யும் குட்டிக் குழந்தையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
  • தந்தை மகளின் பாச வீடியோ வைரல்
Viral Video: நான் அப்பாவுக்கு மேக்கப் செய்கிறேன்! வைரலாகும் குழந்தை வீடியோ title=

வைரல் வீடியோ: தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பந்தம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு தூய்மையானது என்பதை நிரூபிக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிறது. ஒரு குட்டிக் குழந்தை, தன் தந்தைக்கு மேக்கப் செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. வருத்தமாக இருப்பவர்கள் கூட, அந்தக் குழந்தையின் வீடியோவைப் பார்த்தால் உற்சாகமான மனநிலைக்கு மாறிவிடுவார்கள். அப்பாவுக்கு மேக்கப் போடும் மகள், நான் மேக்கப் செய்கிறேன் என்று க்யூட்டாக சொல்வதே அழகாக இருக்கிறது.

வீடியோவை படமாக்கும் தனது தாயிடம், “நான் அப்பாவுக்கு மேக்கப் செய்கிறேன்” என்று கூறுவதுடன் வீடியோ தொடங்குகிறது. தளிர்நடை போடும் குழந்தை, கறுப்பு சட்டை மற்றும் இளஞ்சிவப்பு டைட்ஸ் அணிந்திருக்கிறாள். இந்த குட்டிக் குழந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்...

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Blogger | Family | Lifestyle (@thesafillesquad)

அப்பாவுக்கு மேக்கப் செய்கிறேன் என்று மகள் சொன்னதும், ஏற்கனவே தனது கண்களில் மினுமினுப்பான ஐ ஷேடோவைப் பயன்படுத்தியதாக, தந்தை அம்மாவிடம் சொல்கிறார். மகளின் க்யூட்டான வீடியோவிற்கு, "அவர் ஒரு துருப்பு" என்று அம்மா தலைப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | பாம்புக்கு கிஸ் கொடுத்த நபர்: வியப்பில் நெட்டிசன்கள், வீடியோ வைரல் 

இன்ஸ்டாகிராம் பயனரான “thesafillesquad” இல் வீடியோ பகிரப்பட்டது. சமூக ஊடக உலகில் பலரின் வரவேற்பைப் பெற்ற இந்த இன்ஸ்டா பக்கத்தை, 18.7K மக்கள் பின்தொடர்கின்றனர். இந்த இன்ஸ்டா பக்கத்தில், குடும்பத்தில் நடைபெறும் வழக்கமான நிகழ்வுகளையும், குறும்புகளையும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது, இந்த சுட்டிக் குழந்தையின் வீடியோ, 1,00,000 க்கும் மேற்பட்ட லைக்குளை பெற்றுள்ளது. பலர் இந்த வீடியோவுக்கு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.  

"நல்லது அப்பா மற்ற பெற்றோருக்கு சிறந்த உதாரணம்" என்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் எழுதினார். “என்ன அழகான சிறுமி! மேலும் அப்பா பளபளப்பான ஐ ஷேடோவுடன் மிகவும் அழகாக இருக்கிறார்,” என்று ஒருவர் கருத்து தெரிவித்தார்.

இந்த க்யூட்டி குழந்தை, ஏற்கனவே டிரஸ்ஸிங் செய்து, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் போல முடியை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது!!!!!” மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். அப்பாவுடன் அழகாக விளையாடும் குழ்ந்தை, இது ஒரு நல்ல விளையாட்டு என்று பயனர்கள் பலரும் இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.  "இந்த மாதிரியான விஷயங்களுடன் இணைந்து செல்லும் அப்பாக்களை நேசிக்கவும்" என்று ஒரு பயனர் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | ‘ப்பா..என்னா டிராபிக்கு’: சாலையை கடக்க தவிக்கும் பாம்பு, சிரிக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News