ஒரே நேரத்தில் 8 மீன்களை விழுங்கும் கொக்கு! வைரல் வீடியோ!

கொக்கு ஒன்று அதன் உரிமையாளர் அதனை விடுவித்ததும் வேகமாக பறந்து சென்று ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மொத்த மீன்களையும் கண் சிமிட்டும் நேரத்திற்குள் தின்றுவிடுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 28, 2022, 08:48 AM IST
  • மீன்களை சாப்பிடும் கொக்கு.
  • 8 மீன்களை ஒரே வாயில் முழுங்குகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
ஒரே நேரத்தில் 8 மீன்களை விழுங்கும் கொக்கு! வைரல் வீடியோ! title=

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் சிறந்த பொழுதுபோக்காக இருப்பது இணையதளம் தான், இணையத்தளத்திற்குள் சென்றுவிட்டாலே நம்மால் அதிலிருந்த்து அவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட முடியாது.  ஏனென்றால் இணையத்தில் நம்மை வியக்க வைக்கும் வகையில் பல சிறப்பம்சங்கள் நிரம்பியுள்ளன, அதனால் பல மணி நேரம் நாம் இணையத்திற்குள் மூழ்கி நம் நேரத்தை செலவிடுகிறோம்.  நம்முடைய அறிவுத்திறனை வளர்ப்பதிலிருந்து தொடங்கி, கல்விக்காகவும், பொழுபோக்குக்காகவும் என பல்வேறு விதங்களில் இவை பயன்படுகிறது.  பெரும்பாலும் இணையத்தில் பகிரப்படும் குழந்தைகள், விலங்குகள் மற்றும் பறவையினங்களின் காட்சிகள் இணையவாசிகள் கவனத்தில் நொடிப்பொழுதில் ஈர்த்துவிடுகின்றன.

மேலும் படிக்க | மூர்க்கமாய் தாக்க வந்த காட்டு யானைக் கூட்டம்; உயிர் தப்பிக்க மரத்தின் மேல் தஞ்சம் அடைந்த நபர்!

இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தற்போது ஒரு கொக்கின் வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  நமக்கு தெரிந்தவரை கொக்கு என்றாலே ஏரிக்கரைகள், குளங்கள் என நீர் சூழ்ந்த பகுதிகளில் நின்றுகொண்டு நீர் நிலையிலுள்ள மீன்கள் அல்லது ஏதேனும் பூச்சிகளை ஒரே கொத்தாக கொத்தி சாப்பிட்டுவிடும்.  இவ்வளவு சுதந்திரமாக இருக்கும் பறவையை அடைத்து வைத்து உணவுக்காக வெளியே விடும்போது அது எப்படி நடந்துகொள்ளும் என்பதை இங்கு வைரலாகும் வீடியோ நிரூபிக்கிறது.  Animalesybichos என்கிற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டிருக்கும் அந்த வீடியோவில் கொக்கை உரிமையாளர் அவரது பிடியிலிருந்து பறக்க விடுகிறார்.  

 

ஒரு பாத்திரம் நிறைய மீன்கள் இருப்பதை கண்ட அந்த கொக்கு வேகமாக பறந்து வந்து வேகவேகமாக அந்த மீன்களை சாப்பிட்டு சில நிமிடங்களில் பாத்திரத்தை காலியாக்குகிறது. கடந்த செப்டெம்பர் 23ம் தேதியன்று ட்விட்டரில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவினை இதுவரை நாற்பத்தி ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்து இருக்கின்றனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு பல லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.

மேலும் படிக்க | Horrifying Video: தானாக இயங்கிய கார்; பழுது பார்ப்பவர் மீது மோதி நசுக்கிய பயங்கரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News