குரங்குக்கு காதல் வந்தா என்ன நடக்கும்? இந்த வீடியோவில் பாருங்க!!

இந்த வீடியோக்களில் இரு குரங்குகள் செய்வதைப் பார்த்தால் சிரிப்பை அடக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வேடிக்கையான வீடியோக்களை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2021, 10:22 AM IST
குரங்குக்கு காதல் வந்தா என்ன நடக்கும்? இந்த வீடியோவில் பாருங்க!!   title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  சமீபத்திய நாட்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது இரு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.  இது குரங்குகளின் லூட்டி பற்றிய ஒரு வீடியோக்களாகும். 

இந்த வீடியோக்களில் இரு குரங்குகள் செய்வதைப் பார்த்தால் சிரிப்பை அடக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வேடிக்கையான வீடியோக்களை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இதை லைக் செய்துள்ளனர். 

வைரலாகி வரும் முதல் வீடியோவில், ஒரு குரங்கு அதன் குழந்தைக்கு பால் ஊற்றிக்கொண்டு இருக்கிறது. அப்போது அங்கு மற்றொரு குரங்கு வருகிறது. ஏற்கனவே உள்ள குரங்கை இந்த குரங்கு பாடாய் படுத்துகிறது. பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக, அந்த குரங்கின் மீது ஏறி அதன் தலையின் மீது அமர்கிறது. நாம் இந்த வீடியோவில் அடுத்து காணும் விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. 

ALSO READ | Viral: ஒரே நேரத்தில் இரண்டு எலிகளை பிடித்த இரண்டு தலை பாம்புகள்; அதிர்ச்சி வீடியோ

பெண் குரங்கின் மேல் அமர்ந்த இந்த குரங்கு அதன் உதடுகளில் முத்தமிடுகிறது. 

இந்த கியூட்டான வீடியோவை இங்கே காணலாம்:

தற்போது வைரல் ஆகி வரும் மற்றொரு வீடியோவும் குரங்குகள் பற்றியது. இதில், ஒரு குரங்கு தனது குட்டிக் குழந்தையின் அருகில் வசதியாக படுத்திருக்க, அப்போது அங்கு வரும் மற்றொரு குரங்கு அதை சீண்டுகிறது. ஆனால், அந்த குரங்கின் குழந்தை தன் தாயின் தூக்கம் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள சீண்டும் குரங்கை எதிர்த்து நிற்கிறது. இந்த கியூட்டான வீடியோ பார்க்க அற்புதமாக இருக்கிறது. 

குட்டி குரங்கின் அந்த கியூட்டான வீடியோவை இங்கே காணலாம்.

 

இரண்டு வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் monkeyjungleclub என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இரு வீடியோக்களுக்கும் நெட்டிசன்களின் (Netizens) மகத்தான ஆதரவும், லைக்குகளும் கிடைத்து வருகின்றன. 

ALSO READ | Brilliant Theft: குளிர்பானப் பிரியரான குரங்கு! லாவகமாக பாட்டிலை திருடும் வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News