‘ஷ்ஷ்..அழாத’ தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும் குரங்கு: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ

Monkey Viral Video: நெஞ்சை அள்ளும் ஒரு விடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. இதை பார்த்தால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 19, 2022, 05:49 PM IST
  • மன உளைச்சலில் இருந்த நபர்.
  • மடியில் படுக்க வைத்து ஆறுதல் சொன்ன குரங்கு.
  • இணையத்தை நெகிழ வைத்த வைரல் வீடியோ.
‘ஷ்ஷ்..அழாத’ தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும் குரங்கு: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. கற்பனை செய்யவே முடியாத சில காட்சிகளை இவற்றில் காண்கிறோம். இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப காலங்களில் இவை பட்டையை கிளப்பி வருகின்றன. நாம் அருகில் நின்று காண முடியாத சில அரிய காட்சிகளை இந்த வீடியோக்களில் காண முடிகின்றது. இவற்றில் பல வீடியோக்கள் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கின்றன.

சமூக ஊடகங்களில் நெஞ்சை அள்ளும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், டிப் டாப்பாக உடையணிந்த குரங்கு ஒன்று, உணர்ச்சிவசப்பட்டு மனம் வருத்தப்படும் ஒரு மனிதனை ஆறுதல்படுத்துவதைக் காண முடிகின்றது.

மேலும் படிக்க | சரக்கடித்த குரங்கு செய்யும் லூட்டி: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 

வீடியோவின் துவக்கத்தில் ஒரு சோபாவில் ஒரு நபரும் ஒரு குரங்கும் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அந்த நபர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதும் வீடியோவை பார்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் தனது தலையை பின்னால் சாய்த்து அழுவதையும் வீடியோவில் காண்கிறோம். இதை பார்த்தவுடன், குரங்கு தன் மடியில் படுத்துக்கொள்ளுமாறு அவருக்கு சைகை செய்கிறது. அவர் அதன் மடியில் படுத்துக்கொண்ட உடன் அவர் முதுகை தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறுகிறது.

மற்ற விலங்குகளுடன் ஒப்பிடுகையில் குரங்குகள் பெரும்பாலும் அதிக புத்திசாலித்தனம் கொண்ட விலங்குகளாக இருக்கின்றன. இவை உணர்ச்சிகளை எளிதில் புரிந்துகொள்கின்றன. இருப்பினும், இவற்றுக்கு அதிகப்படியான இரக்கமும் உண்டு என்பதற்கு இந்த வீடியோ மற்றொரு எடுத்துக்காட்டாக உள்ளது. டு. '59.748 farklı hayvan’ என்ற யூசர் நேமில் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, 3.4 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் நூற்றுக்கணக்கான கமெண்டுகளையும் பெற்றுள்ளது.

அம்மாவாக மாறிப்போன குரங்கின் பாச வீடியோவை இங்கே காணலாம்: 

நெட்டிசன்களுக்கு இந்த வீடியோவை மிகவும் பிடித்துப்போனது. தங்களுக்கும் அப்படி ஒரு குரங்கு வேண்டும் என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர். ‘எனது தற்போதைய மனநிலையில், எனக்கு இப்படிப்பட்ட புத்திசாலி குரங்கு தேவை’ என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். ‘இப்படி ஒரு நண்பன் அனைவருக்கும் தேவை’ என மற்றொருவர் எழுதியுள்ளார். 

மேலும் படிக்க |   'போன் வேணும்...' அடம் பிடிக்கும் குட்டி, அடக்கும் அம்மா குரங்கு: கியூட் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News