Video: படபிடிப்பு தளத்தில் நடிகையை பதம் பார்த்த பன்றிக்குட்டி!

சமீபத்தில் விளம்பர படம் எடுப்பதற்காக பன்றித்தீவு சென்ற பிரபல மாடல் அழகி, அங்கிருந்து பன்றிகுட்டியிடன் கடி பட்டு நாடு திரும்பியுள்ளார்!

Last Updated : Feb 16, 2019, 06:37 AM IST
Video: படபிடிப்பு தளத்தில் நடிகையை பதம் பார்த்த பன்றிக்குட்டி! title=

சமீபத்தில் விளம்பர படம் எடுப்பதற்காக பன்றித்தீவு சென்ற பிரபல மாடல் அழகி, அங்கிருந்து பன்றிகுட்டியிடன் கடி பட்டு நாடு திரும்பியுள்ளார்!

வெனிசுலா நாட்டை சேர்ந்த பிரபல மாடல் அழகி Michelle Lewin(வயது 31). இவர் சமீபத்தில் விளம்பரப்படத்தில் நடிப்பதற்காக பாஹாமஸில் உள்ள பன்றி தீவிற்கு சென்றுள்ளார்.

இத்தீவிற்கு இவர் செல்வது இது முதல் முறை இல்லை என்ற போதிலும், தற்போதைய பயணம் இவரின் நினைவில் இருந்து நீக்காத ஒரு நினைவு பயணமாக மாறியுள்ளது. ஆம் தற்போதைய பயணத்தில் மறக்கமுடியாத வகையில் அங்கிருந்த பன்றிகுட்டியிடம் கடிப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Michelle Lewin (@michelle_lewin) on

இந்த சம்பவத்தின் வீடியோவினையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த வீடியோ பதிவிட்ட 5 மணி நேரங்களுக்குள்ளாக 5.7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து படப்படிப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு விளம்பரப்பட குழுவினரும் வீடு திரும்பியுள்ளனர். 

இச்சம்பவம் குறித்த விவரங்கள் வெளியாக, பின்னர் Michelle Lewin-ன் உடல் நலம் குறித்து அவரது ரசிகர்கள் கேள்வியெழுப்ப துவங்கினர். ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக Michelle Lewin-ன் கணவர் Jimmy உள்ளூர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்., Michelle Lewin நலமாக இருப்பதாகவும், பன்றியின் கடி சதையினை கிழிக்காமல் விட்டதால் சாதாரன சிகிச்சையுடன் Lewin வீடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த அண்டு இதே தீவில் புதுமண தம்பதியர் புகைப்படம் எடுக்க முயன்றபோது, மணப்பெண்ணை சுறா மீன் வந்து கடித்தது குறிப்பிடத்தக்கது. 

Trending News