Madurai Mask Parottas: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் சமூக விலகல் (Social Distance) மற்றும் முககவசத்தை (Wear Facemask) கட்டாயம் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளானர். ஆனால் சிலர் அதை புறக்கணிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதொடு மட்டுமில்லாமல், மற்றவர்களுக்கும் கோவிட் -19 (COVID-19) நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சமூக விலகல் மற்றும் முகமூடி குறித்து பல விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் காணொளிகள் வெளியிடப்படுகின்றன. அந்த வரிசையில் தற்போது, முகமூடி வடிவில் இருக்கும் "மாஸ்க் பரோட்டா" (Mask Parottas Video) குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
முகமூடி வடிவில் இருக்கும் மாஸ்க் பரோட்டா-வை மதுரையில் உள்ள ஒரு உணவகத்தில் தயாரிக்கப்படுகின்றன.
READ MORE - தட்டுப்பாட்டில் முக கவாசம்.... எளிமையான முறையை கண்டுபிடித்த பிரபலம்!
"மாஸ்க் பரோட்டா" (Mask Parottas) பற்றி உணவக மேலாளர் பூவலிங்கம் கூறுகையில், "மதுரை (Madurai) மக்கள் முகமூடிகளின் பயன்பாட்டை புறக்கணித்து வருகின்றனர். அதனால் தான் கோவிட் -19 வைரஸ் பற்றி அறிவுறுத்துவதற்காக முகமூடி வடிவ பரோட்டாவை தயாரிக்கிறோம். இதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வடிவிலான ரவா தோசை (Dosa), கொரோனா வடிவிலான வெங்காய போண்டாவும் விற்பனை செய்யப்படுகிறது எனக் கூறினார்.
#WATCH Tamil Nadu: A restaurant in Madurai is serving parottas made in the shape of masks. Manager Poovalingam says, "People of Madurai are not very particular about wearing masks. We introduced mask parottas to spread awareness among people about #COVID19." pic.twitter.com/pmdCRNBtCo
— ANI (@ANI) July 9, 2020
READ MORE - See Pic: மதுரையை கலக்கும் மாஸ்க் பரோட்டா... தெரிக்கவிடும் கோயில் நகரம்..!
இதனை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதேபோன்று எதிர்ப்பு சக்தி (Immunity) திறனை அதிகரிக்க வாடிக்கையாளர்களுக்கு மூலிகை ரசமும், கபசூரகுடிநீரும் வழங்கப்படுகிறது. மாஸ்க் பரோட்டா 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா காலத்திலும் தங்களது முத்திரையை பதித்திருக்கின்றனர் மதுரை மக்கள் அன்பதில் சந்தேகமே இல்லை..