Watch: பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும் பல்ப் திருடனின் புதிய உக்தி!

நடு இரவில் உடற்பயிற்சி செய்வது போன்று ஒருவர் கடையில் மாட்டியுள்ள பல்ப்பை திருடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது!

Written by - Devaki J | Last Updated : Jul 2, 2018, 12:14 PM IST
Watch: பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும் பல்ப் திருடனின் புதிய உக்தி! title=

நடு இரவில் உடற்பயிற்சி செய்வது போன்று ஒருவர் கடையில் மாட்டியுள்ள பல்ப்பை திருடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது!

இந்த பரந்த உலகத்தில் வேடிக்கையான பல விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிவதில்லை. சில நிகழ்வுகள் மட்டும் எப்படியாவது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி அனைவரிடமும் சென்றடைகிறது. 

தற்போதைய காலகட்டத்தில் சிசிடிவி கேமிராவில் மூலம் தான் பல கொள்ளையர்களை காவல் துறையினர் பிடிக்கின்றனர். இது போன்ற ஒரு பல்ப் திருடனின் வீடியோ வைரலாவதை நாங்கள் கண்டோம். 

அந்த நபர் நடு இரவில் ஒரு கடை வாசலில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது எதிரில் உள்ள சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து சென்று கொண்டே இருக்கிறது. சிறிது நேரம் அவர் தொடர்ந்து கை மற்றும் கால்களை ஆட்டியபடி உடற் பயிற்சியை செய்கிறார். பின்னர் அவர் சற்று தள்ளி வந்து தனது கைகளை மேலே தூக்குகிறார் அப்போது பார்த்து முன்புறம் உள்ள சாலையில் ஒரு வாகனம் வர உடனே இவர் தனது கைகளை கீழே இறக்கு முன்னும் பின்னுமாக ஆட்டுகிறார். 

இதையடுத்து, அவர் மீண்டும் சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து தனது கைகளை மேலே தூக்கிய போது தான் அவர் மேலே தொங்கும் பல்ப்பை கலட்ட இவ்வளவு நேரம் முயற்சி செய்துள்ளார் என்று. பின்னர், அவர் மேலே தொங்கும் பல்ப்பை கலட்டி தனது பேன்ட்டில் உள்ள பாக்கெட்டில் வைத்துவிட்டு அங்கிருத்து கிளம்புகிறார்.

இந்த காட்சியானது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவை அவர்கள்  YouTube-ல் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு பயங்கர நகைச்சுவையாக உள்ளது. 

இதோ அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது...! 

 

Trending News