பரம எதிரிகளான ராஜநாகமும் கீரிப்பிள்ளையும் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும்? வீடியோ வைரல் ஆகும்

King Cobra Video: பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் உள்ள பகை அனைவரும் அறிந்ததே. இரண்டும் எங்கு சந்தித்தாலும், அங்கு சண்டை மூள்வது சகஜம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 28, 2022, 03:51 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
  • சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
பரம எதிரிகளான ராஜநாகமும் கீரிப்பிள்ளையும் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும்? வீடியோ வைரல் ஆகும்  title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் உள்ள பகை அனைவரும் அறிந்ததே. இரண்டும் எங்கு சந்தித்தாலும், அங்கு சண்டை மூள்வது சகஜம். ஒன்றை ஒன்று பார்த்து விட்டால் போதும், இரண்டுக்கும் சண்டையிடும் எண்ணம் வந்துவிடும். 

கீரிப்பிள்ளை எப்பொழுதும் பாம்பை தாக்கும் ஆர்வத்திலேயே இருக்கும். பாம்பு சில சமயம் தாக்கும் தோரணையிலும், சில சமயம் பாதுகாப்பாக பதுங்கும் பாணியையும் கடைபிடிக்கும். தற்போது மீண்டும் பாம்பு மற்றும் கீரிப்பிள்ளை தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

காட்டில் ராஜநாகமும் கீரிப்பிள்ளையும் எதிரெதிரே வருவதை வீடியோவில் காண முடிகின்றது. ராஜநாகம் பார்ப்பதற்கு பிகவும் பயங்கரமாக காணப்படுகின்றது. ஆனால், கீரிப்பிள்ளை அதைப் பார்த்து அச்சப்படுவதாக தெரியவில்லை. 

நாகப்பாம்பு கீரிப்பிள்ளை மோதல்

சமூகவலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் ராஜநாகமும் கீரிப்பிள்ளையும் மோதிக்கொள்வதை காண முடிகின்றது. இரண்டும் எதிரெதிரே நிற்கின்றன. அடுத்த நொடியே இரண்டுக்கும் இடையே கடுமையான சண்டை தொடங்குகிறது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவை பார்த்து மக்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | ஓடும் ஆற்றில் மீன் பிடிக்கும் கரடிகள் - வைரல் வீடியோ 

நாகப்பாம்பும் கீரிப்பிள்ளையும் எதிரெதிர்ரே சந்திக்கும் அந்த திக் திக் வீடியோவை இங்கே காணலாம்: 

காட்டின் இந்த வீடியோ வைரலானது

ராஜநாகம் மற்றும் கீரிப்பிள்ளை தொடர்பான இந்த வீடியோ wild_animal_shorts என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த வீடியோவிற்கு 'பாம்பு மற்றும் கீரிப்பிள்ளையின் சண்டை' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைதளவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். ஒரு பயனர், 'கீரிப்பிள்ளை இந்த பாம்புக்கு ஒரு சரியான போட்டி' என எழுதியுள்ளார். 

இந்த வீடியோவுக்கு பல வித வியூஸ்களும் கமெண்டுகளும் கிடைத்துள்ளன. 

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News