விரைவில் அதிமுக - தேமுதிக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாகவும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல மாதங்களுக்கு பிறகு பேட்டியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் மக்களவை தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில், இதுவரை விஜயகாந்த் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் பல மாதங்களுக்கு பின்னர் விஜயகாந்த் பேசிய வீடியோ அவரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
தேமுதிகவினர் நன்றாக உழைத்து, 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். #நாடாளுமன்றதேர்தல் |#நாளைநமதே | #நாற்பதும்நமதே pic.twitter.com/QgDMCnFv0m
— Vijayakant (@iVijayakant) April 8, 2019