பேய்க்கு பளார் என விழுந்த அடி, சிரிப்பு கேரண்டி - வைரல் வீடியோ

Hilarious Ghost video : பேய்க்கே பளார் என அடி விட்டவிரின் வீடியோ வயிறு குலுங்க சிரிப்பை ஏற்படுத்துவதால் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 7, 2024, 10:30 AM IST
  • பேயை பளார் என அறைந்த வீடியோ
  • ஷாக்கான பேய் அதிர்ச்சியாகி ஓட்டம்
  • இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோ
பேய்க்கு பளார் என விழுந்த அடி, சிரிப்பு கேரண்டி - வைரல் வீடியோ title=

பேய் என்ற பெயரைக் கேட்டே பயந்து கொண்டிருக்கும் உலகம் இது. தாத்தா, பாட்டி என யாரையாவது பேயை பார்த்திருக்கிறீர்களா? என கேட்டீர்கள் என்றால் அவர்கள் சொல்வர்கள் பாருங்கள் ஒரு கதையை, சினிமா திரைக்கதைக்கு நிகராக இருக்கும். பயம், அதிர்ச்சி, சுவாரஸ்யம் எல்லாம் அந்த கொஞ்ச நேர கதையிலேயே இருக்கும். இப்படியே கேட்டு கேட்டு உலகம் முழுக்க இருக்கும் மக்களும் பேய் என்ற ஒன்றுக்கு இன்றளவும் பயந்து கொண்டிருக்கிறார்கள். ஊருக்கு, ஊரு பேய் கதைகள் வித்தியாசமாக இருக்கும். அதன் வடிவத்தில் இருந்து செயல்பாட்டில் இருந்து எல்லாமே உக்கிரத்தின் உச்சங்களாக இருக்கும். ஒவ்வொரு பேய் கதையிலும் அது வேட்டையாடும் விதம், வினோதமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.

அப்படி பேய் கதைகளை கேட்டு வளர்ந்த இந்த சமூகத்தில், சோஷியல் மீடியாக்கள் வந்ததும் இந்த கதைகள் வீடியோ வடிவில் ரியாலிட்டியாக இன்னும் புது உச்சம் பெறத் தொடங்கிவிட்டது. காமெடி பேய் முதல் உக்கிரமான பேய் வரை இன்ஸ்டாகிராம் வீடியோக்களில் பார்க்கலாம். பேய் கதையை கேட்டு பயத்தில் இருந்து நீங்கள், வீடியோவாக பார்க்கும்போது அட பேய் இப்படி தான் இருக்குமா? என தோன்றும். அதேநேரத்தில் பேயை வைத்து சேட்டை வீடியோக்களும் நிறைய உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பேய்க்கு பளார் என அடி கொடுக்கும் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | மாட்டிடம் கேள்வி கேட்ட சிறுமி..அதுவும் பதில் சொல்லுதே!! செம க்யூட் வைரல் வீடியோ..

பேயை பளார் என அடிக்கும் வைரல் வீடியோ : 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

காட்டுப்பகுதியில் மரத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் இளைஞர், அந்த மரத்துக்கு மற்றொரு பக்கம் பேய் இருப்பதை அறியவில்லை. திடீரென அந்த பேய் அந்த இளைஞரை பார்க்க வந்ததும் பயத்தின் விளிம்புக்கு சென்ற அவர், திடீரென எதிரில் நின்ற பேயை பளார் என அடித்துவிட்டார். இந்த காட்சியை பார்க்கும்போது நிச்சயம் உங்களுக்கு சிரிப்பு வரும். மேலும், இந்த வீடியோ மக்களை சிரிக்க வைப்பதற்காக எடுக்கப்பட வீடியோ என்பதும் தெரியவரும்.

இதுதவிர இன்னும் சில வைரல் வீடியோக்களும் இருக்கின்றன. அதில் ஒருவர், கடைக்கு வரும் வாடிக்கையாளரை அறைந்துவிட்டு பொம்மை பின்னால் ஒளிந்து கொள்கிறார். அடி வாங்கிய வாடிக்கையாளர் மிகுந்த கோபத்துடன் திரும்பி அறைந்தவரை அடிக்காமல், அவர் ஒளிந்திருந்த பொம்மை அறைகிறார். இந்த வீடியோவும் இப்போது காண்போரை ரசிக்க வைக்கிறது. 

மேலும் படிக்க | புலியிடம் பாசத்தை பொழிந்த சின்னப் பையன்... பதிலுக்கு புலி என்ன பண்ணுச்சு பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News