பசுமாட்டை கவ்விப்பிடித்த சிங்கத்தை அசால்டாக வந்து விரட்டிய விவசாயி - வைரல் வீடியோ

பசு மாடு ஒன்றை வேட்டையாடிக் கொண்டிருந்த சிங்கத்தை சாதாரணமாக வந்து  விரட்டியடித்த விவசாயின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 7, 2023, 09:01 PM IST
  • பசுவை தாக்கிய சிங்கம்
  • அசால்டாக விரட்டிய விவசாயி
  • தப்பித்து ஓடிய சிங்கம் வீடியோ
பசுமாட்டை கவ்விப்பிடித்த சிங்கத்தை அசால்டாக வந்து விரட்டிய விவசாயி - வைரல் வீடியோ title=

சிங்கத்துக்கு இருக்கிற மதிப்பே போச்சுப்பா என்பதற்கு இந்த வீடியோவே சரியாண உதாரணம். ஏனென்றால் காட்டு ராஜா சிங்கம் குறித்து பலருக்கும் அபரிமிதமான கற்பனை இருக்கும். அதன் கண்ணில் பட்டால் தப்பிக்க முடியாது என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கும். காரணம், சிங்கம் குறித்து படித்த கதைகள் அதீத கற்பனையை உருவாக்கி வைத்திருக்கின்றன. ஏராளமானோர் சிங்கத்தை நேரில் பார்த்தது இல்லை என்பதால் வீடியோவில் பார்ப்பதையும், கதைகளில் கேட்பதையும் வைத்து அவர்களாகவே ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | கால்பந்து வைத்து கன்னாபின்னானு மாயம் செய்யும் இளைஞன்: சத்தியமா நம்ப முடியல... வைரல் வீடியோ

அப்பேர்பட்ட சிங்கத்தை குஜராத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் அசால்டாக டீல் செய்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தன்னுடைய பசு மாட்டை சிங்கம் தாக்கிக்கொண்டிருப்பதை பார்த்த அவர், பெரிய பதற்றம் எல்லாமல் இல்லாமல் அசால்டாக வந்து அதனை விரட்டுகிறார். இதனை வீடியோவில் பார்க்கும் ஒரு திகைப்பாக கூட இருக்கலாம். ஆனால் சிங்கம் என்றெல்லாம் அவர் பயப்படவில்லை.

விவேக் கொட்டாடியா என்பவர் பதிவிட்ட அந்த வீடியோவில், சாலையொன்றில் சிங்கம் ஒன்று பசுவின் கழுத்தைக் கவ்விக்கொண்டு தாக்கிக்கொண்டிருக்கிறது. எப்படியாவது பசுவைத் தனக்கு இரையாக்கிவிட வேண்டும் என்று தொடர்ந்து பசுவைத் தாக்கிக்கொண்டிருக்கும் சிங்கம், பசுவின் கழுத்தைப் பிடித்தவாறே சாலையோரமாக இழுத்துச் செல்கிறது.

பசுவின் கழுத்தைக் கவ்வி இழுத்துக்கொண்டிருக்க, அந்த விவசாயி சாலையோரத்தில் கீழே கிடந்த பொருள் ஒன்றை எடுத்துக்கொண்டு அவற்றை நோக்கிவந்ததும் சிங்கம், பசுவின் கழுத்தை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிச் சென்றது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு இணையதளவாசிகள் பலரும், அந்த விவசாயியின் தைரியத்தைப் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும் படிக்க | எப்புட்றா... பெரிய முட்டையை அசால்டாக விழுங்கும் பாம்பு... வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News