ராஜஸ்தான்: இந்த நவீன காலங்களிலும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. சில இடங்கள் நம்மை அதிசயிக்க வைக்கின்றன. அவற்றின் மர்மங்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன.
கலை மற்றும் கலாச்சாரத்தால் நிறைந்த ராஜஸ்தானின் மண்ணில் புதைக்கப்பட்ட பல ரகசியங்கள் உள்ளன. இங்குள்ள ரகசியங்கள் விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாகவே இருக்கின்றன. இவற்றை பற்றி கேள்விப்பட்டு பெரிய நிபுணர்களும் வியப்பில் ஆழ்ந்து போகிறார்கள். ராஜஸ்தானில் உள்ள கிராது கோயிலும் (Temple) அப்படி பல மர்மங்கள் நிறைந்துள்ள ஒரு இடமாகும்.
இந்த கோயிலைப் பற்றி பிரபலமான ஒரு கூற்று உள்ளது. இங்கு தெரிந்தோ அல்லது தற்செயலாகவோ அந்தி வேளைக்குப் பிறகு யாராவது தங்கி விட்டால், அவர்கள் கல்லாக மாறி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இக்கோயிலைப் பற்றிய இந்த விஷயம் சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் (Social Media) வைரல் ஆகி வருகிறது.
மனிதன் கல்லாக மாறுகிறான்
ராஜஸ்தானின் (Rajasthan) பார்மர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயிலின் பெயர் கிராடு கோயில். இந்த கோயிலைக் காண மக்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறார்கள். ஆனால் அந்தி நேரத்திற்கு முன்பே இங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். இதற்குப் பின்னால் மிகவும் பயங்கரமான காரணம் இருக்கிறது.
ALSO READ: Watch: பாகிஸ்தானில் தீ வைத்து தகர்த்தப்பட்ட இந்து கோயில், கொதித்தெழிந்த Netizens!!
இந்த கோயிலில், சூரியன் (Sun) மறைந்தபின் யார் இந்த கோவிலில் தங்குகிறார்களோ அவர்கள் நிரந்தரமாக கல்லாக மாறி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த அச்சத்தின் காரணமாக அந்தி வேளைக்குப் பிறகு யாரும் இங்கு தங்குவதில்லை.
முனிவரது சாபத்தின் உண்மை
இந்த பயங்கரமான மர்மத்தின் பின்னால் ஒரு துறவியின் சாபம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதுவரை இந்த கோயிலில் அந்தி வேளைக்குப் பிறகு யாரும் தங்கியது கிடையாது என்று இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். இந்த கோயில் மிகவும் அழகாக இருக்கிறது. பல இடிபாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. மக்கள் இங்கே ஒரு சுற்றுலாவுக்கு செல்வதைப் போல செல்கிறார்கள். இருப்பினும், இந்த மர்மமான கோவிலின் மீது மக்களுக்கு ஒரு அச்சமும் உள்ளது. கோயிலின் பெயரைக் கேட்டாலே சிலர் நடுங்குகிறார்கள்.
அச்சுறுத்தும் கோயிலின் மர்மம்
இத்தகைய அச்சுறுத்தும் மர்மம் இங்கு இருந்தாலும், இந்த கோயிலின் அழகு மக்களை தன்னை நோக்கி ஈர்க்கிறது. இதன் காரணமாக, மக்களுக்காக இங்கு பகல் வேளைகளில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
இருப்பினும், மக்கள் கோயிலிலிருந்து அந்தி சாயும் முன் திரும்பி விடுகிறார்கள். சிலரோ அச்சம் காரணமாக இந்த கோயிலை தொலைவிலிருந்தே பார்த்துவிட்டு சென்று விடுகிறார்கள். பலருக்கு இந்த கோயிலுக்குள் செல்ல துணிச்சல் வருவதில்லை.
ALSO READ: நீங்க செய்யும் வேலை கடினமானது என நினைத்தால் இந்த வீடியோவை பாருங்க!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR