நொய்டா: டெல்லி என்சிஆர் பகுதியான நொய்டா செக்டர் 100 இல் அமைந்துள்ள ஹைரைஸ் லோட்டஸ் பவுல்வர்ட் (Lotus Boulevard) சொசைட்டியில் வசிப்பவருக்கும், அங்கு பாதுகாவலராக வேலை பார்க்கும் ஒருவருக்கும் ஒரு சிறிய பிரச்சனைக்காக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அங்கு வந்த பத்து, பதினைந்து பாதுகாவலர்களால் குடியிருப்பாளர் கொடூரமாக தாக்கப்பட்டார். தாக்குதலுக்கு உள்ளன சுரேஷ் குமார் என்ற அந்த நபர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாதுகாவலர் மற்றும் அடுக்குமாடி பாதுகாப்புப் பொறுப்பாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக செக்டர் -39 காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதே நேரத்தில், 10 செக்யூரிட்டி பணியாளர்களிடம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். "பாதுகாவலர் ஸ்ரீகாந்த் சுக்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பு பொறுப்பாளர் அம்லேஷ் ராய் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
Guards in Noida's posh society thrash resident with lathis #noida pic.twitter.com/ZG82ymo5va
— rajni singh (@crazyrajni) September 8, 2021
செக்யூரிட்டி பணியாளரை அறைந்த குடியிருப்புவாசி:
மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள அறையின் சாவியை கொண்டு வருமாறு சுரேஷ் குமார் ஒரு செக்யூரிட்டி பணியாளரிடம் கேட்டுள்ளார். சாவி கொடுக்க முடியாது. இந்த மின் மீட்டர்கள் அறையில் செல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை என செக்யூரிட்டி கூறியுள்ளார். இதன்பிறகு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அடுக்குமாடி குடியிருப்புவாசியான குமார் செக்யூரிட்டி பணியாளரை அறைந்ததாகக் கூறப்படுகிறது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. செக்யூரிட்டி பணியாளரை அறைந்ததால், அவருடன் சேர்ந்து சுமார் ஒரு டஜன் செக்யூரிட்டி பணியாளர்கள் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்புவாசி குமாரை தாக்கியுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
ALSO READ | Viral Video: கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன் - சிதைத்த மனைவி
ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கிய செக்யூரிட்டி பணியாளர்கள்:
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த சம்பவத்தின் வீடியோ, செக்யூரிட்டி பணியாளர்கள் அடுக்குமாடி குடியிருப்புவாசியை ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கும் காட்சியை காணலாம். கூட்டமாக சேர்ந்து பலர் தாக்கும் போது சுரேஷ்குமார் "முஜே அவுர் மரோ" (அடியுங்கள், என்னை இன்னும் அடியுங்கள்) என்று கூறிக்கொண்டு வெளியே வருவதையும் பார்க்க முபியும். பின்னர் அவர் ஒரு கட்டையை எடுத்து ஒரு செக்யூரிட்டியை அடிகிறார். இதன் பின்னர் செக்யூரிட்டி பணியாளர்கள் அவரை மீண்டும் தாக்குகிறார்கள்.
நொய்டா கூடுதல் டிசிபி ரன்விஜய் சிங் கூறுகையில், 'பாதுகாப்பு காவலர்கள் குடியிருப்பாளரை கொடூரமாக தாக்கியது தெளிவாகத் தெரிகிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
ALSO READ | Viral Rescue: காப்பாற்றுவது நல்லதுதான்; ஆனால் அது நாகபாம்பாக இருந்தால்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR