இந்தூர்: காதலுக்கு எந்த காரணமும் தெரியாது, எல்லையும் இல்லை, கண்கள் இல்லை என பல்வேறு விஷயங்கள் சொல்லப்படுவதுண்டு. காதலுக்கு கண் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் காதலுக்கு உயிர்ப்பிருக்கிறது. என்றென்றும் மாறாக் காதலும் உண்டு மாளாக்காதலும் உண்டு. இந்த அழகான கதைக்கு இந்த மேற்கோள் மிகவும் பொருத்தமானது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தனது நீண்ட நாள் காதலியை சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டார்.
அல்கா என்ற பெயரில் வாழ்ந்து வந்த அஸ்தித்வா சோனி, ஆண் அடையாளத்தை ஏற்றுக்கொண்டு, இந்தூர் குடும்ப நீதிமன்றத்தில் ஆஸ்தாவை மணந்தார். இந்த திருமண விழாவில் இருதரப்பினரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
திருமணத்தில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு
அல்கா சோனி என்று பெண், சில வருடங்களுக்குப் பிறகு தான் ஒரு பெண் அல்ல என்பதை உணர்ந்து ஆணாகவே வாழத் தொடங்கினார். திருநங்கையான இவர், பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி, தனது 47 வது பிறந்தநாளில், நீண்ட நாள் காதலியை மணந்துக் கொண்டார். திருமணத்துக்கான தனிப்பட்ட சட்டங்கள் உட்பட ஏற்கனவே உள்ள சட்டங்களைப் பின்பற்றி, நேரான உறவில் இருக்கும் திருநங்கைகள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
மேலும் படிக்க | டெடி பியர் பொம்மைக்குள் ஆயுதங்களை வைத்து போர் நடத்தும் ஹமாஸ்! வீடியோ வைரல்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருநங்கையாய் இருந்து ஆணாய் மாறிய அஸ்தித்வா சோனி, தனது திருமணத்தை சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் செய்து கொண்டார்.
சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ், சட்டப்பட்டி திருமணம் முடிவடைந்தாலும், பாரம்பரிய முறைப்படி, டிசம்பர் 11 அன்று சப்தபதி சடங்கின் மூலம் மணமக்களாவார்கள்.
சிக்கல்களை தாண்டிய திருமணம்
திருமணத்திற்கு முன், தம்பதியினர் அனைத்து சட்ட மற்றும் பிற நடைமுறைகளையும் முடிக்க முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் நிலைமையை விளக்கி, இந்தூர் துணை ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தனர். விண்ணப்பத்தை பரிசீலித்த அதிகாரிகள் அவர்களது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டனர்.
ஆஸ்தா, தனது வாழ்க்கைத் துணையான அஸ்தித்வாவை அவரது சகோதரி மூலம் சந்தித்தார். சாதாரண உரையாடல்களாக ஆரம்பித்தது ஆழமான நட்பாக மாறி, இறுதியில் காதலாக மாறியது. இரு வீட்டாரின் சம்மதத்துடனும் ஆதரவுடனும் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க | பட்டப் பகலில் இளைஞரை அடித்தே கொன்ற கொடூரம்! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ