இணைய உலகம் ஆச்சரியங்களை அள்ளித் தருவதில் நம்மை ஏமாற்றுவதே இல்லை. காணக் கிடைக்காத பல அரிய விஷயங்களை, காட்சிகளை இங்கே கண்டு களிக்கலாம். விலங்குகள் உலகம் நமக்கு புரியாத பல புதிர்களைக் கொண்டுள்ளன. வல்லவன் வாழ்வான் என்ற விதி விலங்குகள் வாழ்க்கையில் நன்றாக பொருந்தக் கூடியது. வலிமை கொண்ட உயிரினங்கள், பலவீனமான விலங்குகளை தின்று வாழ்கின்றன. உயிருக்கான போராட்டங்கள் அடங்கியது தான் விலங்குகள் வாழ்க்கை. சமூக ஊடகத்தில் விலங்குகள், குறிப்பாக பறவைகள் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் மிகவும் வைரலாகும். இதற்கென தனி ரசிகர்கள் இருக்கின்றனர் என்றால் மிகையில்லை. அந்த வகையில் கழுகு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
வைரலாகி வரும் அந்த காணொளியில், கழுகு ஒன்று, தண்ணீரில் சீறிப்பாய்ந்து, மிக அழகாக வேட்டையாடுகிறது. நொடியில் அதை பிடித்து விடுகிறது. தண்ணீரில் பாய்ந்து வேட்டையாடிய மீனை மிகவும் கெட்டியாக லாபமாக, தனது அலகுகளால் பிடித்துக் கொள்கிறது. மீன் பிடித்துக் கொண்டு வானத்தில் பறக்கும் அந்த கழுகு , சிறிதும் தாமதிக்காமல் அதனை பறந்து கொண்டே நடு வானில் சாப்பிட தொடங்குகிறது . நீரில் வேட்டையாடிய மீனை, தாமதிக்காமல் நொடி பொழுதில் வானில், மீன் உயிருடன் இருக்கும் போதே, ருசி பார்க்கும் அந்த கழுகின் ஆற்றலை கண்டு இணையவாசிகள் வியந்துள்ளனர்.
வைரலாகும் கழுகின் வீடியோவை கீழே காணலாம்:
கழுகு தண்ணீருக்குள் பாய்ந்து மீனை பிடித்த திறனையும், பிடித்த மீனை நடுவானிலே ருசி பார்த்த திறனையும் இணையவாசிகள் பெரிதும் வியந்து பாராட்டி வருகின்றனர். நீரில் அது பாய்ந்த வேகமும், அதே வேகத்தில் மீனை உயிருடன் ருசித்த திறனையும் காட்டும் இந்த வீடியோ மிகவும் வைரலாகியது. இதனை ஏராளமோர் பகிர்ந்து கொண்டதுடன், பலவேறு வகையான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | சுறா மீனை சுமந்து செல்லும் கடல் பருந்து... இணையவாசிகளை வியக்க வைத்த வீடியோ!
கழுகுகள் சுதந்திரத்தின் சின்னம். ஏனெறால் அவை எவ்வளவு தூரம் பறக்க முடியும் அல்லது எந்த விலங்குகளை வேட்டையாடலாம் என்பதற்கான வரம்புகள் எதுவுமே இல்லை. கழுகுகள் அவற்றின் இரு மடங்கு பெரிய விலங்குகளைத் தாக்கி கொல்லும் திறன் பெற்றது. மனிதனை விட 10 மடங்கு வலிமையான பிடியுடன் கூடிய கூர்மையான கண்களுடன், கழுகுகள் எந்த விலங்கையும் வீழ்த்தும் திறன் பெற்றது.
கழுகு பெரிய கண்கள் கூறிய நுனி கொண்ட வளைந்த அலகு வேட்டையாட தோதுவாக வலுவான நகம் கொண்ட கால்கள் பெரிய நீண்ட இறக்கைகள் ஆகியவை கொண்ட பறவை. கழுகு இனம் பிற விலங்குகளை வேட்டையாடி தன் அழகால் கொட்டி தின்னும். இதன் கண்பார்வை மிகவும் கூர்மையானது. கண் பார்வைத் திறனால், தொலைவில் உள்ள இறையையும் கழுகால் காண முடியும். உலகில் சுமால் 60 வகையான கழுகு இனங்கள் உள்ளன. கழுகின் பார்வை மனிதனை விட நான்கைந்து மடங்கு சிறந்தது என்று கூறப்படுகிறது. இதனால் புற ஊதா கதிர்களையும் கூட காண முடியும். அதனால் தான் நிலத்தில் உள்ள விலங்குகள் மட்டுமல்ல, நீரில் இருக்கும் விலங்குகளையும் வேட்டையாடுகிறது கழுகு
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | இறந்த தாயை எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த இழப்பு.... வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ