ஆஸ்துமாவை குணமாக்கும் கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு வரம்

குழந்தை பிறப்பதை கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகள் கடுமையான ஆஸ்துமா அபாயத்தை குறைக்கலாம் என்ற மகிழ்ச்சித் தகவலை புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கருத்தடைக்கு உதவும் மாத்திரையே ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் என்பது, இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் இரட்டை பயனைத் தருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2020, 11:35 PM IST
  • குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை உட்கொள்வது, இனப்பெருக்க வயதிற்குட்பட்ட பெண்களுக்கு கடுமையான ஆஸ்துமா ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்
  • மாதவிடாய் சுழற்சியின் போது இந்த ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் சில பெண்களுக்கு ஆஸ்துமா அறிகுறிகளை மோசமாக்குகிறது...
ஆஸ்துமாவை குணமாக்கும் கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு வரம் title=

குழந்தை பிறப்பதை கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகள் கடுமையான ஆஸ்துமா அபாயத்தை குறைக்கலாம் என்ற மகிழ்ச்சித் தகவலை புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கருத்தடைக்கு உதவும் மாத்திரையே ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் என்பது, இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் இரட்டை பயனைத் தருகிறது.

குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை உட்கொள்வது, இனப்பெருக்க வயதிற்குட்பட்ட பெண்களுக்கு கடுமையான ஆஸ்துமா ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. ஆஸ்துமா என்பது நாள்பட்ட நுரையீரல் நோய் ஆகும். இது ஆண்கள் மற்றும் சிறுவர்களை விட பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகம் பாதிக்கிறது.

ஆஸ்துமா ஏற்பட்டால் சுவாசிப்பதில் சிரமம், மார்பில் இறுக்கத்தன்மை, மூச்சுத்திணறல், இருமல் என பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில், நோயாளிகளின் உயிருக்கே உலை வைக்கிறது ஆஸ்துமா.

ஆஸ்துமா உள்ள பெண்கள், மாதவிடாய் காலத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலம் முன்பே பல ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றனர். தற்போது, சுவீடனில் (Sweden) உள்ள கோதன்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் (University of Gothenburg) கூற்றுப்படி, குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை உட்கொள்வது, இனப்பெருக்க வயதிற்குட்பட்ட பெண்களுக்கு ஏற்படும் கடுமையான ஆஸ்துமா பாதிப்பை குறைக்கும்.

தோராக்ஸ் (Thorax) என்ற மருத்துவ சஞ்சிகையில் இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள், ஒப்பீட்டளவில் சிறியது. மேலும் புரோஜெஸ்டோஜென் மட்டும் கொண்ட ஹார்மோன் கருத்தடை மருந்துகளின் அடிப்படையில் மட்டுமே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி,  பாலினங்களுக்கு இடையில் ஆஸ்துமாவின் நிகழ்வு மற்றும் தீவிரத்தன்மையின் தெளிவான வேறுபாடுகளை பாலியல் (sex hormones) ஹார்மோன்கள் ஓரளவு விளக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் மாதவிடாய் சுழற்சியின் போது இந்த ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் சில பெண்களுக்கு ஆஸ்துமா அறிகுறிகளை மோசமாக்கவும் செய்யலாம்.

பெண்களுக்கு ஆஸ்துமா தொடர்பான செயற்கை பாலியல் ஹார்மோன்களின் தாக்கம் குறித்த ஆராச்சிகள் பல தசாப்தங்களாக தொடர்ந்தாலும், இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்துமா தீவிரத்தில் வெவ்வேறு வகையான ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் தாக்கம் இருக்கிறது. ஆஸ்துமா தீவிரத்தன்மைக்கு பல்வேறு வகையான ஹார்மோன் கருத்தடைகளைப் பயன்படுத்துவது, வயதின் தாக்கம் மற்றும் பெண்களின் உடல் எடை (பிஎம்ஐ) மற்றும் சிகரெட் புகைத்தல் ஆகியவற்றின் தாக்கம் என்ன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட இனப்பெருக்க வயதுடைய பெண்களை (16-45) கண்டுபிடிக்க ஆப்டிமம் நோயாளி பராமரிப்பு ஆராய்ச்சி தரவுத்தளத்தில் (OPCRD) உள்ளிடப்பட்ட தகவல்களை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டனர். OPCRD என்பது இங்கிலாந்தில் உள்ள 630 முதன்மை பராமரிப்பு நடைமுறைகளின் பெரிய மக்கள் தொகை அடிப்படையிலான, நீண்ட கால, தரவுகளைக் கொண்ட தளமாகும், இதில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளின் சுகாதார பதிவுகள் உள்ளன.

முந்தைய மற்றும் தற்போதைய ஹார்மோன் கருத்தடை பயன்பாடு (ஒருங்கிணைந்த ஈஸ்ட்ரோஜன் / புரோஜெஸ்டோஜென் மற்றும் புரோஜெஸ்டோஜென் மட்டும்) 1-2 ஆண்டுகள், 3-4 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கும் அதிகமானது என பல விதங்களில் ஒப்பீடு செயப்பட்டது.  

ஹார்மோன் கருத்தடை மருந்துகளின் நீடித்த பயன்பாடு ஆபத்தை குறைக்கிறது
ஆய்வின் தொடக்கத்தில், பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (34 சதவீதம்) ஹார்மோன் கருத்தடைகளைப் பயன்படுத்துகின்றனர்: 25 சதவீத பெண்கள் ஒருங்கிணைந்த ஈஸ்ட்ரோஜன் / புரோஜெஸ்டோஜென் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். ஒன்பது சதவீதம் புரோஜெஸ்டோஜென் மட்டுமே கொண்ட கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.

கடுமையான ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் விகிதம், அதிகரிக்கும் வயது மற்றும் பி.எம்.ஐ மற்றும் முந்தைய கர்ப்பங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருந்தது. ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துபவர்கள் கடுமையான ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுவதில்லை.

கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கவில்லை என்றாலும், மூன்று-நான்கு ஆண்டுகள் மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பயன்படுத்துவதால் ஆஸ்துமா ஏற்படும் விகிதம் குறைகிறாது. ஓரிரு ஆண்டுகள் மட்டும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்று ஆய்வு கூறுகிறது. 

செயற்கை பாலியல் ஹார்மோன்கள் ஆஸ்துமா மீது எவ்வித தாக்கம் ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, அடிப்படை உயிரியல் செயல்முறைகளை ஆராய கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், ஆன்மீகம், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News