பிறந்தநாளுக்கு எனக்கு பேனர் வைக்க வேண்டாம்: புதுச்சேரி முதல்வர்!!

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கட்சியினருக்கு தன்னுடைய பிறந்தநாளுக்கு யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்!

Last Updated : May 27, 2018, 04:11 PM IST
பிறந்தநாளுக்கு எனக்கு பேனர் வைக்க வேண்டாம்: புதுச்சேரி முதல்வர்!! title=
புதுச்சேரியில், தற்போது நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகின்றது. இதையடுத்து, வரும் 30ம் தேதி பிறந்தநாள் காணும் நாராயணசாமியை மகிழ்விக்க கட்சி நிர்வாகிகள் பலவிதமான திட்டங்களை தீட்டி இருக்கின்றனர். 
 
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொண்டர்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதன்படி, தன்னுடைய பிறந்தநாளுக்கு யாரேனும் பேனர்களை வைத்தால், அதனை தன்னுடைய சொந்த செலவில் அகற்றுவேன் என்றும் மீறி செயல்படும் கட்சி நிர்வாகிகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் போடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
 
முன்னதாக, நாராயணசாமியின் பிறந்தநாளையொட்டி அண்ணாசாலையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, யாரும் பேனர் வைக்க வேண்டாம் என முதலமைச்சர் நாராயணசாமி தனது கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

Trending News