பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் நள்ளிரவு உடல் நலக்குறைவால் காலமானார்!   

Last Updated : May 15, 2018, 01:47 PM IST
பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்! title=

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் நள்ளிரவு உடல் நலக்குறைவால் காலமானார். இவர், ஏராளமான நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். நாயகன், குணா, ஜெண்டில் மேன், பாட்ஷா, ஜீன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். 

பாலகுமாரன் தமிழ்நாட்டில் வாழும் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் ஜூலை 5-ம் தேதி 1946௦ ஆம் ஆண்டு பிறந்தார். இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் அருகேயுள்ள திருக்காட்டுப்பள்ளி ஆகும். இவருடைய தந்தையான சுலோசனா தமிழாசிரியர் ஆவார்.

பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர். தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 
அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். 

இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி உள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும்கே. பாக்யராஜ்குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 

அவர் தன்னுடைய 71-வது வயதில் மே 15 2018 அன்று  உடல் நலக்குறைவால் இயற்கை மரணம் எய்தினார்.

Trending News