Fat Burn Tips: இந்த டயட் சார்ட்டை1 மாதம் பின்பற்றினால், உடல் எடை 10 கிலோ குறையும்

Rapid Belly Fat Reduction With Diet: உடல் எடை அதிகரிப்பதைப் பற்றி கவலைப்படுபவர்கள், உணவு உண்ணும் முறையை முறைப்படுத்தினாலே 1 மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைக்கலாம்.

எடை அதிகரிப்பால் கவலைப்படுபவர்களுக்கான பல்வேறு தீர்வுகள் உள்ளன. விரைவில் உடலை சிக்கென்று சின்ன இடையாக்க இந்த உணவுத் திட்டத்தை பயன்படுத்திப் பாருங்கள்

1 /8

உடல் எடையை குறைக்க விரும்பினாலும், அதிகரிக்க விரும்பினாலும் அல்லது ஆரோக்கியமாக இருக்க விரும்பினாலும் அதற்கு முக்கியமான ஒன்று உண்ணும் உணவு 

2 /8

எடை அதிகரிப்பைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர்கள் சத்தான உணவை உண்டு, உடல் இளைக்கலாம். ஆனால், அதற்கு சீரான உணவு பழக்கங்களை பின்பற்ற வேண்டும்

3 /8

சரிவிகித உணவு என்பது வைட்டமின், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புகள் இவை அனைத்தும் கலந்த கலவையான உணவு ஆகும். இதனுடன் நார்ச்சத்துக்களும் நீரும் சரியான அளவில் இருந்தால் தான், நமது உடல் சத்துக்களை உறிஞ்சும்  

4 /8

சமச்சீர் உணவு என்பது குறிப்பிட்ட அளவு மற்றும் விகிதாச்சாரத்தில் பல்வேறு வகையான உணவுகளை உள்ளடக்கிய ஒரு உணவாகும்

5 /8

நமது அன்றாட உணவில் பருவகால பழங்கள் இருப்பது முக்கியம் என்றால், பருவகாலத்தில் விளையும் உணவுப் பொருட்களும் அவசியமானவை என்பதை கருத்தில் கொள்ளவும். ருசிக்காக மட்டுமே சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது அனைத்து ஆரோக்கியக் குறைவையும் சீர் செய்யும்

6 /8

உடல் எடையை குறைக்க விரும்பினாலும் அல்லது அதிகரிக்க விரும்பினாலும் காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். காலை உணவில் உலர் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். இது தவிர, உங்கள் காலை உணவில் பருவகால பழங்கள், இட்லி, தோசை, அவல் என ஏதேனும் ஒரு பொருளை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

7 /8

மதிய உணவு நமது எடையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே உங்கள் மதிய உணவு எப்போதும் உங்கள் எடையைக் குறைக்க உதவும் வகையில் இருக்க வேண்டும். இதற்கு மதிய உணவில் பிரவுன் ரைஸ் 1 கிண்ணம் பருப்பு எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவுக்கு முன், நீங்கள் வெள்ளரிக்காய், முள்ளங்கி மற்றும் தக்காளி என சாலட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

8 /8

மதிய உணவு மற்றும் காலை உணவை விட இரவு உணவு குறைவாக இருக்கவேண்டும். இரவு உணவில் பருப்பு மற்றும் அரிசியால் செய்யப்பட்ட கிச்சடி சாப்பிடலாம். இதனுடன் காய்கறிகள் அல்லது வேகவைத்த முட்டைகளையும் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்க, இரவு 7 மணிக்குள் இரவு உணவை உட்கொள்வதும் அவசியம்.